லிங்கேஷ் (நடிகர்)

லிங்கேஷ் என்கிற லிஜீஷ் ஆரம்பகாலத்தில் லிங்கேஷ் என்ற பெயரில் தொகுப்பாளராக அறிமுகமானவர். [1]

வாழ்க்கைக் குறிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் பிறந்தவர்.[1] திருப்போரூர் அரசுப் பள்ளியில் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்து இலயோலா கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் முடித்தார். அங்கு படிக்கும் காலகட்டத்தில் பல மேடை நாடகங்கள், வீதி நாடகங்கள் போன்றவற்றை தன் குழுவோடு அரங்கேற்றினார். நடிப்பு, நடனம், நாடகம், என்று அனைத்திலும் ஆர்வமாய் பங்கேற்று பல பரிசுகளையும் வென்றார். பின்னர் தாம்பரம் மெட்ராஸ் கிறித்துவ கல்லூரியில் பொது நிர்வாகம் (Public Administration) என்ற முதுகலைப் பட்டம் முடித்தார்.

தொலைக்காட்சித் தொகுப்பாளராக

மெட்ராஸ் கிறித்துவ கல்லூரியில் படிக்கும் காலகட்டத்தில் விஜய் தொலைக்காட்சியில் சலனம் என்ற நெடுந்தொடரில் கவிதா பாரதியிடம் துணை இயக்குநராகப் பணி புரிந்தார். பின்னர் சன் குழுமத்தின் சன் மியூசிக்கில் தொகுப்பாளராக பணிபுரிந்தார். இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஹோம் மினிஸ்டர் என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மெட்ராஸ் திரைப்படத்தில் இவர் நடிகராக அறிமுகமானார். இவரின் துவக்க கால கட்டத்திலேயே இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான கபாலி திரைப்படத்தில் பிரபலமான நடிகர் ரசினிகாந்துடன் வில்லனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.[1][2]

நடித்த திரைப்படங்களில் சில

  1. மெட்ராஸ் - காலி மற்றும் அன்புவின் நண்பன்
  2. ஒருநாள் கூத்து - பாஸ்கர்
  3. கபாலி[2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=லிங்கேஷ்_(நடிகர்)&oldid=22106" இருந்து மீள்விக்கப்பட்டது