லத்தூர் ஊராட்சி ஒன்றியம்
லத்தூர் ஊராட்சி ஒன்றியம், இந்தியாவின் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]இது செய்யூர் வட்டத்தில் அமைந்த லத்தூர் ஊராட்சி ஒன்றியம் நாற்பத்தி ஒன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் லத்தூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, லத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 84,921 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 38,458 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 925 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
லத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 41 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- அடையாளசேரி
- அணைக்கட்டு
- அம்மனூர்
- ஆக்கினாம்பேடு
- இரண்யசித்தி
- கடலூர்
- கடுகுப்பட்டு
- கல்குளம்
- கானத்தூர்
- கீழச்சேரி
- கூவத்தூர்
- கொடூர்
- சிறுவங்குணம்
- சீக்கினாங்குப்பம்
- சீவாடி
- செங்காட்டூர்
- செம்பூர்
- செய்யூர்
- தண்டரை
- தாட்டம்பட்டு
- திருவாதூர்
- தென்பட்டினம்
- தொண்டமநல்லூர்
- நீலமங்கலம்
- நெடுமரம்
- நெமந்தம்
- நெல்வாய்
- நெல்வாய்பாளையம்
- நெற்குணப்பட்டு
- பச்சம்பாக்கம்
- பரமன்கேணி
- பரமேஸ்வரமங்கலம்
- பவுஞ்சூர்
- பெரியவேலிகடுக்
- பெரும்பாக்கம்
- முகையூர்
- லத்தூர்
- வடக்குவயலூர்
- வடப்பட்டினம்
- வீரபோகம்
- வேட்டக்காரகுப்பம்