றசல் ஆர்னோல்ட்

றசல் பிரேமகுமாரன் ஆர்னோல்ட் (Russel Arnold, பிறப்பு: அக்டோபர் 25, 1973, கொழும்பு) இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர். சிறந்த களத்தடுப்பாளர். இவர் 44 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 180 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

றசல் ஆர்னோல்ட்
Russel Arnold
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரசல் பிரேமகுமாரன் ஆர்னோல்டு
பிறப்பு25 அக்டோபர் 1973 (1973-10-25) (அகவை 51)
கொழும்பு, இலங்கை
பட்டப்பெயர்குப்பியா, மயில்[1]
மட்டையாட்ட நடைஇடக்கைத் துடுப்பாளர்
பந்துவீச்சு நடைவலக்கை
பங்குமட்டையாளர், வர்ணனையாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 68)19 ஏப்ரல் 1997 எ. பாக்கித்தான்
கடைசித் தேர்வு1 சூலை 2004 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 91)6 நவம்பர் 1997 எ. தென்னாப்பிரிக்கா
கடைசி ஒநாப28 ஏப்ரல் 2007 எ. ஆத்திரேலியா
ஒரே இ20ப (தொப்பி 1)15 சூன் 2006 எ. இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒநா இ20ப
ஆட்டங்கள் 44 180 1
ஓட்டங்கள் 1,821 3,950 7
மட்டையாட்ட சராசரி 28.01 35.26 7.00
100கள்/50கள் 3/10 1/28 -/-
அதியுயர் ஓட்டம் 123 103 7
வீசிய பந்துகள் 1,334 2,157 -
வீழ்த்தல்கள் 11 40 -
பந்துவீச்சு சராசரி 54.36 43.47 -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு 3/76 3/47 -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
51/- 48/- -/-
மூலம்: கிரிக்கின்ஃபோ, 2 மே 2016

விளையாட்டு வரலாறு

1997ல் முதன்முதலாக டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாட ஆரம்பித்த இவர், அதே வருடத்தில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக தனது முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடினார். தொடக்கத்தில் ஆரம்ப துடுப்பாட்டக்காரராக சர்வதேச போட்டிகளில் விளையாடிய ஆர்னோல்ட் பின்னர் 5ம், 6ம் துடுப்பாட்டக்காரராக விளையாடி வருகிறார். ஆட்டத்தின் மிகச்சிக்கலான நேரத்திலும் கலங்காமல் விளையாடக்கூடியவர் என்ற பெயரைக் கொண்டவர். ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை அணியை பலமுறை தனது அமைதியான ஆட்டத்தினால் காப்பாற்றியிருக்கிறார். சிறந்த களத்தடுப்பாட்டக்காரரும், அவசியமான நேரங்களில் திறமையாக பந்து வீசக்கூடியவருமாவார். மெதடிஸ்த கிறிஸ்தவரான இவரும் முத்தையா முரளிதரனும் இலங்கை அணியில் தற்போதுள்ள இரண்டு தமிழ் வீரர்களாகும்.

புள்ளி விபரம்

  • டெஸ்ட் ஆட்டத்தில் இவர் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை - 123 ( 1999ல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக லாகூரில் நடந்த ஆட்டத்தில்)
  • ஒருநாள் ஆட்டத்தில் இவர் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை - 103 ( 1999ல் சிம்பாப்வே அணிக்கு எதிராக புலவாயோ, சிம்பாப்வேயில் நடந்த ஆட்டத்தில்)
  • இதுவரை டெஸ்ட் ஆட்டங்களில் 11 விக்கற்றுகளையும், ஒருநாள் ஆட்டங்களில் 38 விக்கற்றுகளையும் தனது பந்துவீச்சினால் கைப்பற்றியிருக்கிறார்.

2007 உலகக்கிண்ணத் தொடரில்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் முன்னணி வீரர்கள் எல்லோரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து போய்விட, இவரும் திலகரட்ண டில்சானும் இணந்து 97 ஓட்டங்கள் எடுத்து இலங்கை அணியின் ஓட்டத்தொகையை ஓரளவு உயர்த்தினார்கள்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புக்கள்

"https://tamilar.wiki/index.php?title=றசல்_ஆர்னோல்ட்&oldid=28371" இருந்து மீள்விக்கப்பட்டது