ரேவா (இசையமைப்பாளர்)

இந்தியாவின் கேரளாவிலுள்ள பாலக்காட்டை பூர்வீகமாக கொண்ட ரேவா, பல வருடங்களாக இசையமைப்பாளராக இருந்து வருகிறார். கல்லூரி நாட்களில் இருந்தே, விளம்பரங்கள், இசை தொகுப்புகள் என்று பரபரப்பாக இருந்த ரேவா, 2021 ம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி நடித்து வெளியான தமிழ் திரைப்படமான முகிழ் [1] மூலமாக திரையுலகில் இசையமைப்பாளராக தன் பணியை ஆரம்பித்துள்ளார். 2023 ம் ஆண்டு ஜீ5 இணையதளத்தில் வெளிவந்து வெற்றிகரமாக பேசப்பட்ட வலைத் தொடரான, அயலியில் இவரது இசையமைப்பிற்காக பேசப்பட்டுள்ளார். ஷிவ் மோஹா இயக்கிய ஆசை படத்தின் இசையமைப்பாளராக தற்போது பணிபுரிந்து வருகிறார்.[2]

ரேவா
Reeva.jpg
இசையமைப்பாளர் ரேவா
பின்னணித் தகவல்கள்
பிறப்புஜூன் 20
பாலக்காடு, கேரளா
தொழில்(கள்)இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)
இசைத்துறையில்2018 ம் ஆண்டு முதல்

தொழில்

பாலக்காடு கல்பாத்தியில் இசைக் குடும்பத்தில் பிறந்துள்ள இவரின் தாயார் சாரதாம்பாள் மற்றும் தகப்பன் விஸ்வநாதன் என்பவர்கள். இவரின் தாத்தாவின் பெயர் ஆர்.சேஷமணி என்பதாகும். ஊமையாக இருந்தாலும் அகில இந்திய வானொலியில் ஏ கிரேடு கலைஞராக இருந்த இவரின் மூலமே ரேவாக்கு இசை அறிமுகமாகியுள்ளது. சிறுவயதில் இருந்தே வயலின் இசைக்கவும், பாடல்கள் பாடவும் தொடங்கியுள்ளஇவர் பன்னிரண்டு ஆண்டுகள் கர்நாடக இசையை முறைப்படி கற்றுள்ளார், உடையலங்கார தொழில்நுட்ப படிப்பை படிப்பதற்காக சென்னையில் உள்ள தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்க வந்த இவர், சென்னையில் அவரது மாமா, ராமநாதனின் ஸ்வரலயா என்ற இசைப்பள்ளியிலும் , நட பிந்து என்ற இசைக் கூடத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். 2014 ம் ஆண்டிலிருந்து, விளம்பரம் மற்றும் பொழுதுபோக்கு ஊடகங்களில் இவரது இசை வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். விளம்பரங்கள், பைலட் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், வீடியோ பாடல்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சில விளம்பரங்கள் மற்றும் வீடியோ பாடல்களுக்கான பாடல் வரிகளுக்கு இசையமைத்துள்ளார். 2019 ம் ஆண்டிலேயே மலையாளம் மற்றும் மராத்தி திரைப்படங்களில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியிருந்தாலும், தமிழில் 2021 ம் ஆண்டு வெளியான முகிழ் திரைப்படமே அறிமுகமாகும்.[3]

இசைத்தொகுப்புகளின் பட்டியல்

இசை இயக்குனராக திரைப்படங்கள்
ஆண்டு தலைப்பு மொழி
2018 மாங்கல்யம் தந்துனானென மலையாளம்
2019 கல்லூரி டைரி மராத்தி
2021 முகிழ் தமிழ்
2023 அயலி தமிழ்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ரேவா_(இசையமைப்பாளர்)&oldid=8573" இருந்து மீள்விக்கப்பட்டது