ரெமோ (திரைப்படம்)

ரெமோ (Remo), பாக்கியராஜ் கண்ணனின் இயக்கத்தில், ஆர். டி. இராஜாவின் தயாரிப்பில் வெளியாகியுள்ள தமிழ்த்திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ஆகியோர் முதன்மைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆன்சன் பால், கே. எஸ். ரவிக்குமார், சரண்யா ஆகியோர் துணைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பி. சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவிலும், அனிருத்தின் இசையிலும், ரூபனின் படத்தொகுப்பிலும், உருவாக்கப்பட்டதாகும். இத்திரைப்படமானது அக்டோபர் 07, 2016 அன்று வெளியானது.[1]

'ரெமோ'
இயக்கம்பாக்கியராஜ் கண்ணன்
தயாரிப்புஆர். டி. இராஜா
கதைபாக்கியராஜ் கண்ணன்
கதைசொல்லிஎஸ். ஜே. சூர்யா
இசைஅனிருத்
நடிப்பு
ஒளிப்பதிவுபி. சி. ஸ்ரீராம்
படத்தொகுப்புரூபன்
கலையகம்24ஏஎம் ஸ்டுடியோஸ்
விநியோகம்
  • 24ஏஎம் ஸ்டுடியோஸ் (தமிழில்)
  • ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் (தெலுங்கு மொழிமாற்றப்படம்)
வெளியீடு7 அக்டோபர் 2016 (2016-10-07)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

  • சிவகார்த்திகேயன் - சிவகாந்தனாக /ரெஜினா மோட்வானி (ரெமோ)
  • கீர்த்தி சுரேஷ் - மருத்துவர் காவ்யாவாக
  • சதீஸ் - வல்லிகாந்த்
  • கே. எஸ். ரவிக்குமார் - கே. எஸ். இரவிகுமாரகவே
  • சரண்யா _ சிவாவின் அன்னையாக
  • இராசேந்திரன் மோகனா சந்தோசாக
  • யோகி பாபு - உள்ளூர் மனிதர், ரெமோ மீது காதல் கொள்பவராக
  • அருண்ராஜா காமராஜ் - அருண்
  • ஆடுகளம் நரேன் - காவ்யாவின் தந்தை
  • மயில்சாமி - பாதுகாப்புப் பணியாளராக
  • சுவாமிநாதன் - மௌலி அண்ணாவாக
  • ஆன்சன் பால் - மருத்துவர் விசுவநாதனாக (விசுவா)
  • கல்யாணி நடராசன் - காவ்யாவின் அன்னையாக
  • பிரதாப் போத்தன் - மருத்துவர் இரவிச்சந்திரனாக
  • பேபி ரக்சா- நான்சியாக
  • பிரியதர்சிணி ராஜ்குமார் - விசுவாவின் அன்னையாக
  • ஸ்ரீ திவ்யா - மருத்துவர் திவ்யாவாக (மதிப்புறுத்தோற்றத்தில்)
  • ராஜூ சுந்தரம்- தமிழ்ச்செல்வி பாடலில் மதிப்புறுத்தோற்றத்தில்
  • பாக்கியராஜ் கண்ணன் - தமிழ்ச்செல்வி, சிறகடிக்குதே பாடல்களில் மதிப்புறுத்தோற்றத்தில்
  • எஸ். ஜே. சூர்யா - விவரிப்பவராக

கதை

ஒரு பெண்ணை இளைஞன் ஒருவன் வலிந்து பின்தொடர்ந்து காதலித்து, பின்னர் காதலிக்க வைக்கின்றான். கதாநாயகன் செயற்கையாக தனக்குத் தானே உருவாக்கிக்கொள்ளும் பெண் வேடம் அவனின் காதலுக்கு துணைசெய்கின்றது. சிவா (சிவகார்த்திகேயன்), ஒரு பெரிய நடிகர் ஆக வேண்டும் என்னும் கனவுகளுடன் நாடகங்களில் நடித்து வரும் வேலையில்லா இளைஞர். இப்படத்தின் கதைநாயகி காவ்யா (கீர்த்தி சுரேஷ்) ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிகின்றார். சிவாவுக்குக் காவ்யாவைப் பார்த்ததும் அவர் மேல் காதல் வந்துவிடுகின்றது. ஆனால் அவருக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது எனத் தெரிந்ததும் மனமுடைந்துவிடுகின்றார். நடிப்பை வெளிப்படுத்தும் தேர்வில் சிவா பெண் வேடமிடுகிறார். செவிலியராக வேடம் புனைந்திருக்கும் போது தற்செயலாக காவ்யாவுடன் அவருக்கு நட்பு கிடைக்கிறது. அந்த நட்பின் ஊடாக அவர் காவ்யா மனதில் காதலை ஏற்படுத்தும் வேலைகளைச் செய்கின்றார். பெண், ஆண் என்ற மாற்றங்களில் காவ்யாவை வட்டமிடும் சிவாவின் காதல் வெற்றிபெற்றதா, சிவாவின் இரட்டை வேடம் எப்படி முடிவுக்குக் வந்தது என்பதே இப்படத்தின் கதைப்பின்னல்.[2]

படப்பணிகள்

அறிமுக இயக்குநரான பாக்கியராஜ் கண்ணனின் இயக்கத்தில், ஆர். டி. இராஜாவின் தயாரிப்பில் இப்படத்தில் நடிப்பதாக 2015இல் சிவகார்த்திகேயன் அறிவித்தார்.[3]

இசை

இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்[4]. பாடல்களை பாடலாசிரியர்கள் விக்னேஷ் சிவன், விவேக், கு. கார்த்திக், இன்னோ கெங்கா ஆகியோர் எழுதியுள்ளனர்.

வெளியீட்டுப்பணிகள்

இப்படத்தின் தலைப்பு,இசை யுடியூபில் 23 சூன் 2016 இல் நேரலையாக வெளியிடப்பட்டது [5] அதன்பிறகு சுவரொட்டி மாதிரி வெளியிடப்பட்டது. இப்படத்தின் செயற்கைக்கோள் ஒளிபரப்பு உரிமையை ஜெயா தொலைக்காட்சி பெற்றுள்ளது, தெலுங்கு, மலையாள உரிமையை ஸ்டார் மா , ஆசியாநெட் ஆகியன பெற்றுள்ளன.[6]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ரெமோ_(திரைப்படம்)&oldid=37210" இருந்து மீள்விக்கப்பட்டது