ருக்குமணி முத்துக்கிருஷ்ணன்
ருக்குமணி முத்துக்கிருஷ்ணன் (பிறப்பு: ஜூலை 10, 1948) மலேசியத் தமிழ் எழுத்தாளர். சிங்கை, மலேசிய வானொலிகளில் 100க்கும் மேற்பட்ட சமூக வானொலி நாடகங்களை எழுதியவர். மலேசியத் தமிழ்ப் பெண்களுக்கு விழிப்புணர்வு தொடர்பான பரப்புரைகளைச் செய்து வருகின்றார்.
முத்துக்கிருஷ்ணன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ருக்குமணி முத்துக்கிருஷ்ணன் |
---|---|
பிறந்ததிகதி | ஜூலை 10, 1948 |
பிறந்தஇடம் | ஈப்போ, பேராக் |
பணி | குடும்ப மாது |
தேசியம் | மலேசியர் |
கல்வி | செட்டியார் தமிழ்ப் பள்ளி ஈப்போ பெண்கள் உயர்நிலைப்பள்ளி |
அறியப்படுவது | மலேசியத் தமிழ் நாடக எழுத்தாளர் |
துணைவர் | மலாக்கா முத்துக்கிருஷ்ணன் |
பிள்ளைகள் | 4 பிள்ளைகள் ஸ்ரீ முருகரசன் |
குழந்தை வளர்ப்பு, சிறுவர் பராமரிப்பில் ஏற்பட்டு வரும் சமூகச் சிக்கல், சீர்கேடுகளைப் பற்றி அதிகம் எழுதி வருகின்றார். ஆதரவற்றக் குழந்தைகளின் இல்லங்களுக்குச் சென்று பணிவிடை செய்வதில் அதிகம் ஈடுபாடு கொண்டவர். இவருடைய கணவர் மலாக்கா முத்துக்கிருஷ்ணனும் ஓர் எழுத்தாளர்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1968 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். இவருடைய ஆக்கங்கள் மலேசியா, சிங்கப்பூர் தேசிய பத்திரிகைகளிலும், நாளிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. பல தொடர்கதைகளை எழுதியுள்ளார். வானொலி நாடகங்கள், தொடர் நாடகங்கள், நகைச்சுவை நாடகங்கள் என் ஏறக்குறைய ஐநூறு படிவங்களைப் படைத்துள்ளார்.
நூல்கள்
- பனியிலே வந்தவள் - நாடகத் தொகுப்பு (1978)
- கணையாழிகளின் கதைகள் (1980)
- நெஞ்சமெல்லாம் நீயே கண்ணா - நாவல் (1982)
- நீங்காத கனவுகள் - தொடர்கதை
- காலமகள் மடியினிலே - தொடர்கதை
பரிசுகளும், விருதுகளும்
- சிறந்த எழுத்தாளர் விருதும், பணமுடிப்பு பரிசளிப்பும் - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (1986)
- பாரதிதாசன் கலைவிழா - பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப் பட்டார் (1999)
- தேசிய நாளிதழ்களின் சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் - 1970 இல் இருந்து 2011 வரை