ரியானா என்ற புனைப்பெயரில் அறிவிக்கப்பட்ட ராபின் ரியனா ஃபென்ட்டி (Robyn Rihanna Fenty, பி. பிப்ரவரி 20, 1988) ஒரு பார்பேடிய இசைக் கலைஞர், நடிகை, இசையமைப்பாளர். 2003இல் ஜெய்-சியால் கண்டுபிடிக்கப்பட்டு 2005இல் இவரது முதலாம் இசைத்தொகுப்பு வெளிவந்தது. 2007இல், குட் கேர்ல் கான் பேட் (Good Girl Gone Bad) இசைத்தொகுப்பு வெளிவந்து உலக அளவுக்கு புகழுக்கு வந்தார்.

ரியானா
Rihanna
Rihanna Cologne 2013 03.jpg
2013இல் ஜெர்மனியில் ரியானா பாடுகிறார்
பிறப்புராபின் ரியானா ஃபென்ட்டி
பெப்ரவரி 20, 1988 (1988-02-20) (அகவை 36)[1]
செயின்ட் மைக்கல், பார்படோஸ்
இருப்பிடம்நியூயார்க் நகரம், அமெரிக்கா[2]
பணிஇசைக் கலைஞர், இசையமைப்பாளர், நடிகை, ஆடை அலங்கார அமைப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2003–இன்று
சொத்து மதிப்பு$ 90 மில்லியன்[3]
வலைத்தளம்
rihannanow.com

ஏழு கிராமி விருதுகளைப் பெற்றுள்ள ரியானா, பில்போர்ட் பெரும் பாடல் அட்டவணையில் 13 பாடல்கள் அடைந்தவர்களில் மிகவும் இளமையானவர். மூன்று கோடி இசைத் தொகுப்புகளை விற்று, வரலாற்றிலேயே பெருமளவில் விற்பனை செய்த பாடகர்களின் பட்டியலில் இருக்கிறார்.[4] 2012இல் டைம் இதழான் உலகில் 100 மிக செல்வாக்கானவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ரியானா&oldid=9461" இருந்து மீள்விக்கப்பட்டது