ரித்திகா சிங்
ரித்திகா சிங் (பிறப்பு 16 டிசம்பர் 1994) ஓர் இந்திய நடிகையும் மற்றும் கலப்பு தற்காப்புக் கலைஞரும் ஆவார். பெரும்பாலும் தமிழில் நடித்து வரும் இவர், இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் தோன்றியுள்ளார். 2002 ஆம் ஆண்டு வெளியான டார்ஸான் கி பேட்டி என்ற இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.[2] 2009 ஆசிய உள்ளரங்கு போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடிய பிறகு, சூப்பர் ஃபையிட் லீகில் பங்கேற்றார். சுதாகர் கொங்கர பிரசாத் இயக்கத்தில், ஆர்.மாதவனுடன் சேர்ந்து இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.[3] அவரது நடிப்பிற்காக 63 வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறப்பு குறிப்பில் அவரது பெயர் இடம்பெற்றது. அடுத்து தெலுங்கு படமான குரு மற்றும் தமிழ் படமான சிவலங்காவில் நடித்தார். ஹிந்தி (சாலா கதூஸ்), தமிழ் ( இறுதிச் சுற்று ) மற்றும் தெலுங்கு (குரு) ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே கதாபாத்திரத்தில் நடித்து பிலிம்பேர் விருதுகளை மூன்று முறை பெற்றார்.
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ரித்திகா சிங் |
---|---|
பிறப்புபெயர் | ரித்திகா மோகன் சிங் |
பிறந்ததிகதி | 16 திசம்பர் 1994[1] |
பிறந்தஇடம் | மும்பை மஹாராஷ்டிரா, இந்தியா |
பணி |
|
தேசியம் | இந்தியன் |
செயற்பட்ட ஆண்டுகள் | 2016 - நடப்பு வரை |
செயற்பட்ட ஆண்டுகள் | 2016 - நடப்பு வரை |
கலப்பு தற்காப்பு கலை
ஒரு குத்துச்சண்டை வீரராகவும், ஒரு தற்காப்புக் கலைஞராகவும் சிறுவயது முதல், சிங்கின் தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சிப் பெற்றார். 2009 ஆசிய உள்ளரங்கு போட்டிகளில், 52 கிலோ எடை பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனையாக அறிமுகமானார். சூப்பர் ஃபையிட் லீகில் பங்கேற்றார்.[4][5]
கலப்பு தற்காப்பு கலை பதிவு
முடிவு | தேதி | எதிராளி | நேரம் | இருப்பிடம் | தேதி | சுற்று | நேரம் | இடம் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|---|---|---|
இழப்பு | 10-0 | டாஸி சிங் | முடிவு (ஒருமித்த) | SFL 22-23 | ஆகஸ்ட் 17, 2013 | 3 | 5:00 | மும்பை, இந்தியா | |
இழப்பு | 10-0 | ஐரீன் கபெல்லோ ரிவேரா | சமர்ப்பிப்பு (ஆம்பார்) | SFL 18 | மே 24, 2013 | 1 | 2:06 | மும்பை, இந்தியா | |
வெற்றி | 1-1 | அபே சாபர் | முடிவு (ஒருமித்த) | SFL 11 | நவம்பர் 30, 2012 | 3 | 5:00 | மும்பை, இந்தியா | |
இழப்பு | 0-1 | மன்ஜித் கோலேகர் | TKO (குத்துக்கள்) | SFL 5 | அக்டோபர் 19, 2012 | 2 | 3:45 | மும்பை, இந்தியா |
நடிப்பு
2013 யில், சூப்பர் சண்டை லீக்கிற்கான ஒரு விளம்பரத்தில் சுதாகர் கொங்கர பிரசாத் ரித்திகா சிங்கை கண்டார், பின்னர் அவர் தனது இருமொழித் திரைப்படமான சாலா கதூஸ் (2016) யில் ஒரு முன்னணிப் பாத்திரத்தில் ரித்திகாவை நடிக்கவைக்க போட்டியின் தலைவர் ராஜ் குந்திரா மூலமாக தொடர்பு கொண்டார்.[6] பின்னர் மணிகண்டன் இயக்கத்தில் ஆண்டவன் கட்டளை படத்தில் தோன்றினார், அது 2016 செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. செப்டம்பர் 2016 வரை. பி. வாசுவின் சிவலிங்கா [7][8] மற்றும் தெலுங்கு படமான குரு ஆகிய இருபடங்களிலும் பணியாற்றிவருகிறார்.[9][10][11]
திரைப்பட வரலாறு
ஆண்டு | திரைப்படம் | பங்கு | மொழி | குறிப்புக்கள் |
---|---|---|---|---|
2016 | இறுதிச்சுற்று | எழில்மதி | தமிழ் | தேசிய திரைப்பட விருது - சிறப்பு ஜூரி விருது
சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ் சிறந்த நடிகைக்கான IIFA விருது - தமிழ் சிறந்த அறிமுக நடிகைக்கான SIIMA விருது |
2016 | சாலா கதூஸ் | எழில்மதி | இந்தி | சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருது |
2016 | ஆண்டவன் கட்டளை | கார்மேகக்குழலி | தமிழ் | |
2017 | குரு | ராமேஸ்வரி | தெலுங்கு | சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் கிரிடிக்ஸ் விருது - தென் |
2017 | சிவலிங்கா | சத்யா | தமிழ் | |
2018 | நீவெவுரோ | அனு | தெலுங்கு | |
2019 | வணங்காமுடி | தமிழ் | படப்பிடிப்பில் உள்ளது |
விருதுகள்
ஆண்டு | திரைப்படம் | விருது |
---|---|---|
2016 | இறுதிச்சுற்று | தேசிய திரைப்பட விருது - சிறப்பு ஜூரி விருது |
ஆனந்த விகடன் சினிமா விருதுகள்-சிறந்த நடிகை விருது [12] | ||
2வது IIFA உட்சவம் - சிறந்த நடிகர் பெண் [13] | ||
சாலா கதூஸ் | சிறந்த நடிகை அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருது | |
சிறந்த நடிகை அறிமுகத்திற்கான ஜீ சினி விருது | ||
2017 | குரு | அப்சரா விருதுகள் - ஆண்டின் மிக சமீபத்திய உணர்வு |
2017 | இறுதிச்சுற்று | 64 வது பிலிம்பேர் விருதுகள் தென் - சிறந்த நடிகை [14] |
2017 | SIIMA 2017 - சிறந்த அறிமுக பெண் விருது [15] | |
2018 | குரு | 65 வது பிலிம்பேர் விருதுகள் தென் - சிறந்த நடிகைக்கான விமர்சகர்கள் விருது |
2018 | ஜீ தெலுங்கு கோல்டன் விருதுகள் - 2017 ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு [16] |
குறிப்புகள்
- ↑ "Ritika Singh learns Tamil for her next". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 6 April 2016. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Ritika-Singh-learns-Tamil-for-her-next/articleshow/51709100.cms. பார்த்த நாள்: 7 October 2016.
- ↑ "Ritika Singh". https://www.imdb.com/name/nm3277309/?ref_=tt_cl_t2.
- ↑ "Ritika Singh wants to stay grounded". 2016-01-14. http://indianexpress.com/article/entertainment/bollywood/ritika-singh-wants-to-stay-grounded/.
- ↑ Sunaina Kumar (2013-06-22). "Not Your Usual Punching Bags" இம் மூலத்தில் இருந்து 2017-09-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170903163000/http://www.tehelka.com/2013/06/not-your-usual-punching-bags/. பார்த்த நாள்: 2016-09-25.
- ↑ "Ritika Singh MMA Stats, Pictures, News, Videos, Biography". http://www.sherdog.com/fighter/Ritika-Singh-116827. பார்த்த நாள்: 2016-09-25.
- ↑ "indianexpress.com". http://indianexpress.com/article/entertainment/bollywood/never-thought-of-acting-in-bollywood-boxer-ritika-singh/.
- ↑ "Lawrence-Ritika in 'Shivalinga' remake" இம் மூலத்தில் இருந்து 17 ஜூலை 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160717210435/http://www.sify.com/movies/lawrence-ritika-in-shivalinga-remake-imagegallery-kollywood-qhooGxiabdhge.html. பார்த்த நாள்: 1 October 2016.
- ↑ "Lawrence-Ritika film Shivalinga starts rolling". http://www.deccanchronicle.com/entertainment/kollywood/160716/lawrence-ritika-film-shivalinga-starts-rolling.html. பார்த்த நாள்: 1 October 2016.
- ↑ "Venkatesh prefers Ritika Singh for remake of Saala Khadoos". http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/venkatesh-prefers-ritika-singh-for-remake-of-saala-khadoos/articleshow/53977424.cms. பார்த்த நாள்: 1 October 2016.
- ↑ "Guru first look: Venkatesh in rugged avatar for his next, see posters". http://indianexpress.com/article/entertainment/regional/guru-first-look-venkatesh-in-rugged-avatar-for-his-next-see-posters-madhavan-movie-review-3037089/. பார்த்த நாள்: 1 October 2016.
- ↑ "Irudhi Suttru goes to Tokyo: Director Sudha Kongara says it's a special honour". http://indiatoday.intoday.in/story/irudhi-suttru-tokyo-film-festival-madhavan-ritika-sudha-kongara/1/774583.html. பார்த்த நாள்: 1 October 2016.
- ↑ "www.vikatan.com". http://www.vikatan.com/news/english/78546-ananda-vikatan-cinema-awards---2016.art.
- ↑ "www.firstpost.com". http://www.firstpost.com/entertainment/iifa-utsavam-2017-day-2-janatha-garage-kirik-party-u-turn-win-top-awards-3359204.html.
- ↑ "indiatoday.intoday.in". http://indiatoday.intoday.in/story/64th-filmfare-awards-south-2017-madhavan-suriya-best-actor/1/981419.html%20%7Ctitle=64th%20Filmfare%20Awards%20South%202017:%20R%20Madhavan%20wins%20Best%20Actor,%20Suriya%20bags%20Critics%20Award%7Cdate=2017-06-18%7Cwork=Indiatoday%7Caccess-date=2017-06-19.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "timesofindia.indiatimes.com". http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/siima-2017-concludes-ranbir-kat-make-a-special-appearance/articleshow/59408453.cms.
- ↑ https://www.ibtimes.co.in/zee-telugu-golden-awards-2017-winners-list-photos-755196