ராமு (ஓவியர்)
ராமு தமிழக ஓவியர்களுள் ஒருவர். இவர் துக்ளக் இதழில் பணியாற்றினார். அரசியல் கேலிச்சித்திரங்கள், காமிக்சு, அட்டைப் படங்கள் ஆகியவற்றுக்கு ஓவியங்களை வரைந்தார்.
வாழ்க்கை வரலாறு
சூர்ய நாராயணன், அமிர்தம்மாள் ஆகியோருக்கு மகனாக ராமு பிறந்தார்.[1] சூர்ய நாராயணன் இரயில்வே துறையில் பணி செய்தார். ராமு சிறுவயதாக இருக்கும் போதே அவரது தந்தை இறந்துவிட்டார். அதனால் பள்ளிப்படிப்பை சிரமத்துடன் முடித்தார்.
இவரது ஓவிய ஆர்வம் காரணமாக சென்னை காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் & கிராப்ட்ஸ் கல்லூரியில் இணைந்து பட்டம் பெற்றார். [1] கல்லூரியில் படிக்கும் பொழுதே பத்திரிகைகளுக்கு ஓவியங்களை அனுப்பி வெளிவந்துள்ளன.
ராமு, தனது அக்கா மகளான பாலசரஸ்வதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். [1] இத்தம்பதிகளுக்கு சூர்யகுமார் என்ற மகனும், கீதாலட்சுமி என்ற மகளும் உள்ளனர். சூர்யகுமார் பத்திரிகை துறையில் பணி செய்கிறார். கீதாலட்சுமி தஞ்சாவூர் ஓவியங்கள், கேரள மியூரல் ஓவியங்கள், கண்ணாடி ஓவியங்கள், 3டி ஓவியங்கள், பானை ஓவியங்கள் வரைவது குறித்தான வகுப்பு எடுக்கிறார்.
மாடல்
சென்னை உழைப்பாளர் சிலை உருவாக்கத்தின் பொழுது மாடலாக இருந்துள்ளார். அந்தச் சிலை பணியின் போது மூன்றாவதாக மேல் நோக்கி பார்க்கும் நபராக இருந்துள்ளார்.
ஓவியங்கள்
கலைமகள் இதழில் இவருடைய முதல் அட்டைப்படமாக வெளிவந்தது. [1] அதனைத் தொடர்ந்து பாலகுமாரன், ராஜேஷ்குமார், தேவிபாலா போன்ற எழுத்தாளர்களின் நாவல்களுக்கு அட்டைப்படம் வரைந்துள்ளார்.
ஓவிய பயிற்சி வகுப்பு
1980 களில் தபால் வழியே ஓவியம் கற்கலாம் என்ற தலைப்பில் ஓவிய பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளார். அதன்படி தபாலில் ஓவிய பாடங்களை அனுப்பி, மாணவர்கள் வரைந்ததை தபால் மூலமே பெற்று திருத்தி தபால் மூலமே அனுப்பும் வகையில் இருந்தது. இப்பயிற்சி வகுப்பில் 24 பாடங்கள் இடம் பெற்றிருந்தன.