ராமரத்னம் நரசிம்மன்

ராமரத்னம் நரசிம்மன் (Ramarathnam Narasimhan) (பிறப்பு 1960), ஒரு இந்திய பொருட்கள் பொறியாளர் மற்றும் இந்திய அறிவியல் நிறுவனத்தின் இயந்திர பொறியியல் துறையில் பேராசிரியர் ஆவார்.[1] இவர் தன்னுடைய முன்னோடி ஆய்வுகளான முறிவு இயக்கவியல் [2] மூலமாக அறியப்படுகிறார். மேலும், இவர், அறிவியல்களுக்கான இந்திய அகாதமி,[3] இந்திய தேசிய அறிவியல் அகாதமி [4] மற்றும் பொறியியல் இந்திய தேசிய அகாதமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சக உறுப்பினராக உள்ளார்.[5] விஞ்ஞான ஆராய்ச்சிக்காக, இந்திய அரசின் உச்ச நிறுவனமான, அறிவியல் கவுன்சில் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம், இவருக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசு வழங்கி கௌரவித்தது. இது, 1999 இல் பொறியியல் அறிவியலுக்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக, மிக உயர்ந்த இந்திய அறிவியல் விருதுகளில் ஒன்றாகும் .[6]

சுயசரிதை

ஆர். நரசிம்மன், மே 31, 1960 அன்று தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் பிறந்தார். 1982 ஆம் ஆண்டில் சென்னையின் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியல் பட்டப்படிப்பைப் பெற்றார். மேலும் இவர் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் சேர அமெரிக்கா சென்றார். 1983 ஆம் ஆண்டில் இயந்திர பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். மேலும் 1986 இல் செயலாக்க விசையியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.[7] இவரது பிந்தைய முனைவர் பட்ட ஆய்வுகள் அரேஸ் ஜே. ரோசாக்கிஸின் ஆய்வகத்தில் உள்ள கால்டெக்கிலும் இருந்தன. அதே நேரத்தில் இந்த நிறுவனத்தில் ஆசிரியராகவும் பணியாற்றினார். இந்தியாவுக்குத் திரும்பிய இவர், 1987 ஆம் ஆண்டில் மும்பையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் சேர்ந்தார். அங்கு இவர் 1991 இல் இந்திய அறிவியல் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு நான்கு ஆண்டுகள் தங்கியிருந்தார். மேலும் இயந்திர பொறியியல் துறையில் பேராசிரியராக (ஐ.ஐ.எஸ்.சி.)பணியாற்றினார்.[8] இந்த காலகட்டத்தில், அவருக்கு மூன்று முறை விடுப்புடன் கூடிய ஊதியம் (சப்பாட்டிகல்கள்) கிடைத்தது. அவை, முதல் முறை சுவீடனில் ராயல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் சிங்கப்பூரில் இரண்டு முறையாக உயர் செயல்திறன் கம்ப்யூட்டிங், மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இருக்கும்போது கிடைத்தது ஆகும்.

மரபுரிமை

நரசிம்மனின் ஆய்வுகள் திண்ம இயந்திரவியல், உலோக முறிவு இயந்திரவியல் மற்றும் பொருட்களின் இயந்திரவியல் ஆகியவற்றின் தத்துவார்த்த, கணக்கீட்டு மற்றும் பயன்பாட்டு அம்சங்களில் கவனம் செலுத்தியுள்ளன.[7] கால்டெக்கில் தனது பிந்தைய முனைவர் நாட்களில், ரோசாகிசுடன் மீள்-நெகிழி திடப்பொருட்களில் வெடிப்பு துவக்கம் மற்றும் வளர்ச்சி குறித்து பணியாற்றினார் மற்றும் வளர்ச்சி மற்றும் மீள்-நெகிழி வெடிப்பு முனைப் புலங்களில் முப்பரிமாண விளைவுகள் குறித்த அவர்களின் ஆய்வுகள், வெடிப்பு முன்பக்கத்திலிருந்து அரை மாதிரி தடிமன் தூரத்தில் விளைவின் ஆதிக்கத்தை நிரூபித்தன. [4] மொத்த உலோகக் கண்ணாடிகளின் சிதைவு மற்றும் அதன் உடையும் தன்மை நடத்தை குறித்தும் அவர் பணியாற்றியுள்ளார். மேலும் மைக்ரோவாய்டு கோலென்சென்ஸ்" மற்றும் "ஷியர் பேண்ட்" சம்பந்தப்பட்ட கலப்பு பயன்முறையில் நீர்த்துப்போகும் உலோகங்களின் மிகச்சிறிய இயந்திரவியல் அளவுகளை அளவிடுவதற்கான ஒரு முறையில் வளர்ச்சியைப் பெற்றவர்.[9] இயந்திர பொறியியல் துறையில் தனது சகாவான உபாத்ராஸ்த ராமமூர்த்தியுடன் இணைந்து, மொத்த உலோகக் கண்ணாடிகளின் முறிவு இயக்கவியலில் பணியாற்றினார். மேலும் இந்த ஆய்வுகள் சிதைந்த உலோகங்களின் நேர அளவை அடையாளம் காணவும் நானோ அகழிகளுக்கு ஒரு விளக்கத்தை முன்மொழியவும் உதவியது.[10] அவர் தனது ஆராய்ச்சிகளை பல கட்டுரைகளில் ஆவணப்படுத்தியுள்ளார்;[11] விஞ்ஞான கட்டுரைகளின் இணைய களஞ்சியமான ரிசர்ச் கேட் மற்றும் கூகிள் ஸ்காலர் முறையே 103 [12] மற்றும் 141 ஐ பட்டியலிட்டுள்ளன.[13]

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

கால்டெக்கில் அரேஸ் ரோசாக்கிசுடன் நரசிம்மன் பணியாற்றியதால், எஸ். பி. ஐ. இ. யின் (SPIE) ருடால்ப் கிங்ஸ்லேக் பதக்கம் வென்றார். 1988 ஆம் ஆண்டில் கிடைத்த இந்த விருதை, ரோசாக்கிஸ் மற்றும் ஆலன் டெய்லர் ஜெஹெண்டர் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.[14] அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் அவருக்கு சாந்தி ஸ்வரூப் பட்நகர் பரிசை வழங்கியது, இது 1999 இல் மிக உயர்ந்த இந்திய அறிவியல் விருதுகளில் ஒன்றாகும்.[15] இந்திய அறிவியல் அகாதமி 2000 ஆம் ஆண்டில் அவரை ஒரு சக உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தது [3] மேலும் அவர் 2002 இல் இந்திய தேசிய அறிவியல் அகாதமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட சக ஊழியரானார்.[16] ஒரு வருடம் கழித்து, இந்திய அறிவியல் நிறுவனம் அவருக்கு 2003இல், ஆராய்ச்சியில் சிறந்து விளங்கிய பேராசிரியர் ருஸ்டோம் சோக்ஸி விருது வழங்கியது.[17] மற்றும் அவர் 2016 இல் சென்னை, இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் புகழ்பெற்ற முன்னாள் மாணவர் விருதைப் பெற்றார்.[7] 2010 முதல் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஜே.சி.போஸ் தேசிய உறுப்பினர் கௌரவத்தை வகித்து வரும் நரசிம்மன், இந்திய தேசிய பொறியியல் அகாதமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் உள்ளார்.[5]

குறிப்புகள்

  1. "Dept of Mechanical Engineering". Indian Institute of Science. 2017. http://www.mecheng.iisc.ernet.in/. 
  2. "Brief Profile of the Awardee". Shanti Swarup Bhatnagar Prize. 2017. http://ssbprize.gov.in/content/Detail.aspx?AID=211. 
  3. 3.0 3.1 "Fellow profile". Indian Academy of Sciences. 2016. http://www.ias.ac.in/describe/fellow/Narasimhan,_Prof._Ramarathnam. 
  4. 4.0 4.1 "Indian fellow". Indian National Science Academy. 2016. http://insaindia.res.in/detail.php?id=P02-1318. 
  5. 5.0 5.1 "INAE fellows". Indian National Academy of Engineers. 2016 இம் மூலத்தில் இருந்து 2015-04-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150403030936/http://inae.in/search-of-fellows/. 
  6. "View Bhatnagar Awardees". Shanti Swarup Bhatnagar Prize. 2016. http://ssbprize.gov.in/Content/AwardeeList.aspx. 
  7. 7.0 7.1 7.2 "IITM Distinguished Alumnus Award". IIT Madras. 2017. http://alumni.iitm.ac.in/daa/list.php#. 
  8. "Faculty profile". Department of Mechanical Engineering, Indian Institute of Science. 2017 இம் மூலத்தில் இருந்து 2018-01-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180113125931/http://www.mecheng.iisc.ernet.in/users/narasi. 
  9. "Handbook of Shanti Swarup Bhatnagar Prize Winners". Council of Scientific and Industrial Research. 1999. http://www.csirhrdg.res.in/ssb.pdf. 
  10. "CRACKED! - New insights into how glasses break". Research Media, IISc. 2017 இம் மூலத்தில் இருந்து 2017-02-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170202042728/http://iisc.researchmedia.center/article/cracked-new-insights-how-glasses-break. 
  11. "Browse by Fellow". Indian Academy of Sciences. 2016. http://repository.ias.ac.in/view/fellows/Narasimhan=3ARamarathnam=3A=3A.html. 
  12. "On ResearchGate". On ResearchGate. 2016. https://www.researchgate.net/profile/Ramarathnam_Narasimhan. 
  13. "On Google Scholar". Google Scholar. 2016. https://scholar.google.com/citations?user=ubwKMwgAAAAJ&hl=en&cstart=0&pagesize=20. 
  14. "Rudolph Kingslake Medal". SPIE. 2017. https://spie.org/about-spie/awards-programs/current-award-winners/rudolph-kingslake-medal-and-prize. 
  15. "Engineering Sciences". Council of Scientific and Industrial Research. 2016 இம் மூலத்தில் இருந்து 2015-09-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150923211647/http://www.csir.res.in/external/heads/career/award/BPRIZE/Engineering_SCIENCES.htm. 
  16. "INSA Year Book 2016". Indian National Science Academy. 2016 இம் மூலத்தில் இருந்து 2016-11-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161104001952/http://www.insaindia.res.in/pdf/YearBook_2016.pdf. 
  17. "Prof. Rustom Choksi Award". Indian Institute of Science. 2017. http://www.iisc.ac.in/about/awards/. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ராமரத்னம்_நரசிம்மன்&oldid=25829" இருந்து மீள்விக்கப்பட்டது