ராமச்சந்திரா (திரைப்படம்)

ராமச்சந்திரா (Ramachandra) ராஜ் கபூர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். எஸ். ரமேஷ் பாபு தயாரிப்பில், தேவா இசையில், 15 ஜனவரி 2003 ஆம் தேதி வெளியானது. சத்யராஜ், பாண்டியராஜன், விஜயலக்ஷ்மி, ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை பி. பாலமுருகன் ஒளிப்பதிவு செய்தார். 1995 ஆம் ஆண்டு வெளியான கில்லாடி இன்ஸ்பெக்டர் என்ற தெலுங்கு படத்தின் மறுஆக்கமாகும்.

ராமச்சந்திரா (திரைப்படம்)
இயக்கம்ராஜ்கபூர் (இயக்குநர்)
தயாரிப்புரமேசு பாபு
திரைக்கதைராஜ்கபூர்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுபி. பாலமுருகன்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
கலையகம்கனகரத்தினா மூவிசு
வெளியீடுசனவரி 15, 2003 (2003-01-15)
ஓட்டம்146 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

சத்யராஜ், பாண்டியராஜன், விஜயலக்ஷ்மி, ஆஷிஷ் வித்யார்த்தி, ஸ்ரீகாந்த், வெண்ணிற ஆடை மூர்த்தி, சந்திரசேகர், டெல்லி கணேஷ், லிவிங்ஸ்டன், ராஜ் கபூர், ஸ்ரீமன், பொன்னம்பலம், பாண்டு, ஜி. எம். குமார், மகாநதி ஷங்கர், தலைவாசல் விஜய், விநாயக், கோவை செந்தில், சிவா நாராயணமூர்த்தி, தீபா வெங்கட், அபிநயஸ்ரீ, மும்தாஜ், பகோடா காதர், நரசிம்மன், லெகாஸ்ரீ, ராதிகா சவுத்ரி, நாகேந்திர பிரசாத்.

கதைச்சுருக்கம்

ராமச்சந்திரன் (சத்யராஜ்) ஒரு நேர்மையான காவல் அதிகாரி. ஆனால், அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்நிலையில், சமூகத்தில் நடமாடும் குற்றவாளிகளை கொலைசெய்ய, ராமச்சந்திரனின் நண்பர்கள் ரகசியமாக அவரை விடுவித்தனர். வெளியே செல்லும் அவர், குற்றவாளிகளை ஒருவர் பின் ஒருவராக கொலை செய்கிறார். இறுதியில், ராமச்சந்திரனுக்கு என்னவானது என்பதே மீதிக் கதையாகும்.

ஒலிப்பதிவு

இந்தத் திரைப்படத்தின் பின்னணி மற்றும் பாடல்களுக்கு இசை அமைத்தார் தேவா (இசையமைப்பாளர்) ஆவார். பா. விஜய் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகியோர் பாடல் ஆசிரியர்கள் ஆவர். நான்கு பாடல்களை கொண்ட ஒலித்தொகுப்பு 2003 ஆம் ஆண்டு வெளியானது.[1][2]

வரவேற்பு

இந்தத் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.[3][4][5]

விருது

2003 தமிழ் நாடு மாநில திரைப்பட விருதுகள்

மேற்கோள்கள்