ராபின் மெக்கிலாசன்
அலத்தார் உரொபின் மெக்கிலாசன் (Alastair Robin McGlashan, அலஸ்டர் ரொபின் மெக்கிலாசன், இறப்பு: சூன் 19, 2012[1]) ஆங்கிலேயத் தமிழறிஞரும், கிரேக்க செவ்வியல் அறிஞரும், ஆங்கிலிக்கக் கிறித்தவ மதகுருவும் ஆவார். இவர் சேக்கிழாரின் பெரியபுராணத்தை, அதில் அடங்கியுள்ள 4281 பாடல்களையும் எளிய ஆங்கில உரைநடையில் மொழியாக்கம் செய்து வெளியிட்டவர்[2].
இயற்பெயர்/ அறியும் பெயர் |
அலத்தார் உரொபின் மெக்கிலாசன் Alastair Robin McGlashan |
---|---|
பிறந்தஇடம் | இங்கிலாந்து |
இறப்பு | சூன் 19, 2012 |
தேசியம் | பிரித்தானியர் |
கல்வி | ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | பெரியபுராணத்தை ஆங்கிலத்தில் உரைநடையாக எழுதியவர் |
மெக்கிலாசன் ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் செவ்வியலும், கேம்பிறிட்ஜில் இறையியலும் படித்தார். பின்னர் தென்னிந்தியாவில் 10 ஆண்டுகள் இறையியலில் குருத்துவப் பணியாற்றினார். இங்கு அவர் தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும் கற்றுத் தேர்ந்தார். பின்னர் இங்கிலாந்து திரும்பி மனநோய் மருத்துவமனை ஒன்றில் மதகுருவாகவும் யுங்கியன் ஆய்வாளராகவும் பணியாற்றினார்.
தனது சேவைகளில் இருந்து இளைப்பாறிய பின்னர் மெக்கிலாசன் பிரித்தானியா, உருசியா, போலந்து, மற்றும் தென்னிந்தியாவில் வசியத் துயில் முறை மருத்துவக் கல்வித் திட்டத்தில் இணைந்து சேவையாற்றினார். இவரது மூதாதையருள் ஒருவர் வடமொழிகளுக்கான ஒப்பீட்டு இலக்கண நூலொன்றை பிரித்தானிய இந்தியா காலத்தில் பதிப்புத்துள்ளார்[3].
இவரது வெளியீடுகள்
தமிழ் ஆய்வுகள்
- புதிய ஏற்பாட்டில் கிரேக்க இலக்கியம்
- The Deserted Wife and The Dancing Girls Daughter (சிலப்பதிகாரமும் மணிமேகலையும்) - சட்ட அறிஞர் செ.சிறிக்கந்தராசாவுடன் இணைந்து எழுதியது
- The history of the holy servants of the Lord Siva — a translation of Cēkkiḻār's Periya Purānam Victoria (British Columbia), ட்ராஃபோர்டு பப்ளிஷிங், 2006
- Sacred history, Saivite and Christian Theology
- The Tirutoṇṭar Tiruvantāti of Nampi Āṇṭār Nampi Journal of Indian Philosophy, vol. xxxvii, no 3 (2009)
- The development of a hagiographical tradition Journal of the Institute of Asian Studies, vol. xxi, no. 1 (செப். 2009)
- The melting heart - religious experience in contemporary Tamil Savism Journal of Contemporary Religion, vo. xxv, no. 2 (மே 2010)
- "The garland of limbs", a translation of Appar Tēvāram iv.9 The Long Poem Magazine, no. 4 (கோடை 2010)
- Amazing grace - the experience of grace in Christian and Hindu bhakti Theology (vol. cv, no 828) நவ/திச. 2002
- Violent devotion and depth psychology The Archive for the Psychology of Religion (வெளிவரவிருக்கிறது)
இறையியல் (தமிழ்)
- Commentary on the Epistles of St John Church of South India Tamil Theological Series, பாளையங்கோட்டை, 1969
- Introduction to the grammar of New Testament Greek Tamil Theological Book Club, Christian Literature Society, மதராஸ், 1972
- Textual Criticism of the New Testament, article in Companion to the Bible Tamil Theological Book Club, Christian Literature Society, மதராஸ், 1973
- New Testament Introduction, part I (Gospels and Acts) Tamil Theological Book Club, Christian Literature Society, மதராஸ், 1979
- New Testament Introduction, part II (Epistles and Revelation) Tamil Theological Book Club, Christian Literature Society, மதராஸ், 1980
இறையியல் (ஆங்கிலம்)
- Conversion — a comparative study Laity Department of the World Council of Churches, Study document no VIII, சூலை 1960
- What the churches teach about the ministry Laity (bulletin of the Laity Department of the World Council of Churches, no 9) சூலை 1960
- Conversion SPCK (Simeon Booklets no. VIII), 1964
- Conservative Evangelicals and the Ecumenical Movement Prism (no 87), சூலை 1964
- A note on Ephesians 1.23 Expository Times, சன. 1965
- Diakonia and the Diaconate The Churchman (vol. 84, nos. 1, 2) Spring, Summer 1970
- Living in a united church The Church Quarterly (vol. 3, no 3) சன. 1971
மேற்கோள்கள்
- ↑ Obituary - Alastair Robin Mcglashan, சறே கொமெட், சூன் 28, 2012
- ↑ The History of the Holy Servants of the Lord Siva, A Translation of the Periya Purāṇam of Cēkkiḻār By Alastair McGlashan
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;tv
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை