ராஜ்சிவா
ராஜ்சிவா | |
---|---|
முழுப்பெயர் | இராஜரட்ணம் சிவலிங்கம் |
பிறப்பு | 15-04-1959 திருகோணமலை, இலங்கை |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
பெற்றோர் | இராஜரட்ணம் மனோன்மணி |
வாழ்க்கைத் துணை |
நிர்மலா |
வலைத்தளம் | [Rajsiva] |
ராஜ்சிவா செருமனியில் வசிக்கும் ஈழத்து எழுத்தாளர். இவர் இயற்பியல், வானியல், அறிவியல் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவற்றை பல்வேறு தளங்களிலும் எழுதிக் கொண்டிருக்கிறார் பல இணைய இதழ்களின் ஆசிரியராகவும் இருக்கிறார்.
யுத்த சூழ்நிலைகளால் ஜெர்மனிக்குப் புலம் பெயர்ந்து இன்றுவரை அங்கு வாழ்ந்து வருகிறார். குவாண்டம் இயற்பியல் மற்றும் வானியற்பியல் ஆகிய இரண்டு கடினமான அறிவியல் தளங்களை இலகு தமிழில் எழுதி வருகிறார்.
வாழ்க்கைச் சுருக்கம்
இவரது இயற்பெயர் இரா. சிவலிங்கம். அப்பா இராஜரட்ணம். அம்மா மனோன்மணி. இலங்கையில் திருகோணமலையில் பிறந்து, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கல்வி கற்று, தற்போது வாறண்டோர்வ் ஜெர்மனியில் வசித்து வருகிறார்.
வெளிவந்த நூல்கள்
- எப்போது அழியும் இந்த உலகம்? (நூல்)|எப்போது அழியும் இந்த உலகம்?
- இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன? (நூல்)|இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன
- நிலவில் ஒருவன் (நூல்)|நிலவில் ஒருவன்
- இறந்தபின்னும் இருக்கிறோமா? (நூல்)|இறந்தபின்னும் இருக்கிறோமா?
அண்டமும் குவாண்டமும்
- கருந்துளைகள் இருக்கின்றனவா? (Blackholes) – பகுதி 1
- விண்வெளியில் கருந்துளை (Blackhole in Space) – பகுதி 2
- நிகழ்வு எல்லை (Event Horizon) – பகுதி 3
- நட்சத்திரம் ஒன்றின் இறப்பு (Death of-a Star) – பகுதி 4
- திரிஷாவும் திவ்யாவும் (Blackhole Information) – பகுதி 5
- கருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – பகுதி 6
பிரபலமான கட்டுரைகள்
- 2012-இல் உலக அழிவும், 'புரியாத புதிர்' மாயன் இன மக்கள்
- ஒரு விமான விபத்தும், ஒரு கடத்தல் நாடகமும் - MH370
- பெல்மேஷ் முகங்கள் – விடுவிக்கப்படாத மர்மம் (Belmez Faces)
- மிக்கி மௌஸும் நீரும் – நீரின் விந்தைத்தண்மைகள் (Micky and Water)
- உறக்கத்தில் கொல்லும் ஒரு அரக்கன் – ஸ்லீப் அப்னியா (Sleep Apnea)
- சிருஷ்டியின் இரகசியமும், ஸ்ட்ரிங் தியரியும்
- இறந்த பின்னும் நாம் உயிர் வாழ்கிறோமா? (எம் தியரி, பல்பரிமாணங்கள்)
- பெருவெடிப்பின் பெரும் இரகசியமும், கடவுள் துகளும்
- 'நேரம்' (காலம்) என்பதை நாம் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா?
- 'வண்ணத்துப் பூச்சி விளைவு' (Butterfly Effect)
- அணுத்துகள்களின் இரட்டை நிலையும், ஷ்ரோடிங்கரின் பூனைச் சிந்தனையும்
- நவீன இயற்பியலும், தேவி பாகவதமும்
- காலப் பயணத்தில் பாட்டனைக் கொல்வது சாத்தியமா? (Grandfather Paradox)
- 'ஒன்கலோ' என்னும் மனித இனத்தையே அழிக்கப் போகும் புதைகுழி
- நிலவுக்குப் போன கதை நிஜமா?
- உலகத்தை முட்டாளாக்கிய ஒருவன்!
- கள்வர்களின் காலம் அறிவியல் தொழில்நுட்பத்தின் மோசடிகளும் ரகசியங்களும்
- நாளையும் விடியும்
- சுயபால் விரும்பிகளும், அவர்களின் மாற்றுக் கருத்தாளர்களும்
- பேய்கள் இருக்கின்றனவா?
- உண்மை என்பது உண்மைதானா?
- லண்டன் ஒலிம்பிக் போட்டிகளும், பதில் தெரியாக் கேள்விகளும்
- அணு உலை - அறிந்தவையும், அறியாதவையும்