ராஜ்கிரண்

ராஜ்கிரண் (பிறப்பு: ஆகஸ்ட் 26, 1954) இந்தியத் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளரும் நடிகரும் ஆவார். இவருடைய இயற்பெயர் காதர் என்பதாகும். திரையுலகில் இவருடைய ராஜ்கிரண் என்ற பெயரே மிகப் பிரபலமானது. தமிழில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சில திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார். இவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் பிறந்தவர்.

ராஜ்கிரண்
பிறப்புஆகத்து 26, 1954 (1954-08-26) (அகவை 70)
கீழக்கரை, இராமநாதபுரம் மாவட்டம்
பணிதிரைப்பட நடிகர், திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1991-தற்போது

திரை வாழ்க்கை

இவர் நிறைய புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்துள்ளாார். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் வடிவேலுவை அறிமுகப்படுத்தியவர் இவரே.[1]

குறிப்பிடத்தக்க திரைப்படங்களில் சில

திரைப்பட விபரம்

நடித்த திரைப்படங்கள்

இது இவர் நடித்துள்ள திரைப்படங்களின் பட்டியலாகும். இது முழுமையான பட்டியல் அல்ல.

ஆண்டு திரைப்படம் மொழி கதாப்பாத்திரம் குறிப்புகள்
1989 என்ன பெத்த ராசா தமிழ் ஜானி நடிகராக அறிமுகம்
1991 என் ராசாவின் மனசிலே தமிழ் மாயாண்டி கதாநாயகனாக அறிமுகம்
1993 அரண்மனைக்கிளி தமிழ் ராசையா
1995 எல்லாமே என் ராசாதான் தமிழ் சிங்கரசு
1996 மாணிக்கம் தமிழ்
1997 பாசமுள்ள பாண்டியரே தமிழ் பாண்டியன்
1998 பொண்ணு விளையிற பூமி தமிழ் பழனிச்சாமி
1998 தலைமுறை தமிழ் பாண்டித் துரை
1998 வீரத் தாலாட்டு தமிழ்
2001 நந்தா தமிழ் பெரியவர் சிறந்த துணை நடிகருக்கான தமிழக அரசின் விருது
2001 பாண்டவர் பூமி தமிழ் தனசேகரன் சிறந்த துணை நடிகருக்கான தமிழக அரசின் விருது
2003 கொஞ்சி பேசலாம் தமிழ் முத்துப்பாண்டி
2004 ஜெய் தமிழ் நல்லமுத்து
2004 கோவில் தமிழ் பெரியசாமி
2005 சண்டக்கோழி தமிழ் துரை சிறந்த துணை நடிகருக்கான தமிழக அரசின் விருது
2005 செவ்வேல் தமிழ் சுடலை
2005 தவமாய் தவமிருந்து தமிழ் முத்தையா சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
2007 கிரீடம் தமிழ் ராஜராஜன்
2007 முனி தமிழ் முனியாண்டி
2007 தொட்டால் பூ மலரும் தமிழ் வரதராசன்
2011 காவலன் தமிழ் முத்துராமலிங்கம்
2011 பொன்னர் சங்கர் தமிழ் ராக்கி அண்ணன்
2011 வேங்கை தமிழ் வீரபாண்டி
2012 திருத்தணி தமிழ் துரைபாண்டி
2014 மஞ்சப்பை தமிழ் வெங்கடசாமி
2015 கொம்பன் தமிழ் முத்தையா
2015 சிவப்பு தமிழ் முன் தயாரிப்பு
2016 "ரஜினிமுருகன்" தமிழ் அய்யங்காளை
2017 "பா பாண்டி" தமிழ் பாண்டி
2018 சண்டக்கோழி 2

தமிழ் || அய்யா

சண்டக்கோழி திரைப்படத்தின் இரண்டாம் பாகம்

இயக்கிய மற்றும் தயாரித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் பங்காற்றியது மொழி குறிப்புகள்
இயக்குநர் கதையாசிரியர் தயாரிப்பாளர்
1988 ராசாவே உன்னை நம்பி  N  N  Y தமிழ்
1989 என்ன பெத்த ராசா  N  Y  Y தமிழ்
1991 என் ராசாவின் மனசிலே  N  N  Y தமிழ்
1993 அரண்மனைக்கிளி  Y  Y  Y தமிழ்
1995 எல்லாமே என் ராசாதான்  Y  Y  Y தமிழ்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ராஜ்கிரண்&oldid=21222" இருந்து மீள்விக்கப்பட்டது