யாழூர் துரை
ஆறுமுகம் தர்மலிங்கம் (ஐயாத்துரை) (அக்டோபர் 15, 1946 - மார்ச்சு 21, 2012) யாழூர் துரை என்ற புனைபெயரில் எழுதி வந்த ஈழத்து எழுத்தாளரும், நாடக இயக்குனருமாவார். யாழ்ப்பாண மண்ணை மையப்படுத்திப் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். "கண்ணீர்த் தேசம்" என்ற சிறுகதைத் தொகுப்பை இவர் வெளியிட்டுள்ளார்.
இயற்பெயர்/ அறியும் பெயர் |
யாழூர் துரை |
---|---|
பிறப்புபெயர் | 15-10-1946 ஆறுமுகம் தர்மலிங்கம் (ஐயாத்துரை) |
இறப்பு | 21-03-2012 |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
பெற்றோர் | ♂ஆறுமுகம் ♀சிவகாமி |
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஆறுமுகம்-சிவகாமி ஆகியோருக்குப் பிறந்தவர். யாழ்ப்பாணம் பூபாலசிங்கம் புத்தகசாலையின் பத்திரிகை விற்பனைப்பகுதியை நீண்ட காலமாக இயக்கி வந்தவர். புலம்பெயர்ந்து தமிழ்நாடு சென்னையில் வசித்து வந்தவர்.