யாத்திசை
யாத்திசை (Yaathisai) என்பது 2023 இல் வெளியான ஒரு இந்தியத் தமிழ் வரலாற்று அதிரடித் திரைப்படம் ஆகும். தரணி இராசேந்திரன் எழுதி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் சக்தி மித்திரன், சேயோன், ராஜலட்சுமி ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்தனர். 2023 ஏப்ரல் 21 இல் இது திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[1] விமர்சகர்களிடம் நேர்மறையான வரவேற்பை பெற்றது.
யாத்திசை | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | தரணி ராசேந்திரன் |
தயாரிப்பு | கே. ஜே. கணேஷ் |
கதை | தரணி ராசேந்திரன் |
இசை | சக்கரவர்த்தி |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | அகிலேஷ் காத்தமுத்து |
படத்தொகுப்பு | மகேந்திரன் கணேசன் |
கலையகம் |
|
வெளியீடு | 21 ஏப்ரல் 2023 |
ஓட்டம் | 121 நிமி. |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
கதை ஏழாம் நூற்றாண்டில் நடப்பதாகக் காட்டப்படுகிறது. சேர, சோழர்களை வென்று தமிழகத்தை தன் ஆளுகைக்குள் கொண்டு வருகிறான் பாண்டியன் இரணதீரன். இரணதீரனிடம் பிடிப்பட்ட சேரனை யவனதேசத்துக்கு கைதியாக நாடு கடத்துகிறான். சோழர்கள் காடுகளில் மறைந்து வாழ்கின்றனர். சேர, சோழர்களுடன் இணைந்து பாண்டியர்களை எதிர்த்த எயினர் குடிகளை பாலை நிலத்துக்கு விரட்டிவிடுகிறான். எயினர்கள் சங்க கால தமிழை தங்கள் வட்டார வழக்காகக் கொண்டவர்களாக உள்ளனர். எயினர்களின் தலைவன் கொதி, பாண்டியர் படைகளை வெற்றி கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்ற உறுதி ஏற்கிறான். அவன் முடிசூட்டிக் கொள்ளவும், தன் தனக்குப் பின் தன் மகன் எயினர்களின் தாயகத்தை ஆளவும் கனவு காண்கிறான். தன் கனவை நிறைவேற்ற எயினர் குடியினரை ஒன்று திரட்டுகிறான். அதற்காக அவன் சோழர்களின் உதவியுடன் பாண்டியனை வெல்ல திட்டம் தீட்டுகிறான். அதன்படி சோழநாட்டில் கோட்டையைக் கைப்பறுவதாகவும், தாங்கள் கோட்டையைக் கைப்பற்றிய பிறகு கோட்டையைப் பாதுகாக்க சோழர் படை வர வேண்டும் எனவும், சோழர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தபிறகு எயினர்களின் பகுதியைத் தாங்கள் சுதந்திரமாக ஆளவிட வேண்டும் என்று சோழர்களிடம் கோருகிறான். சோழர்களும் அதற்கு ஒப்புகின்றனர். எயினர் குடியினர் கொதியின் தலைமையில் அதிரடியாகத் தாக்குதல் நடத்தி சோழநாட்டின் கோட்டையைப் பாண்டிய படைகளிடமிருந்து கைப்பற்றுகின்றான். பள்ளிப்படை பழங்குடியினரின் உதவியைப் பெற்ற இரணதீரன் சோழநாட்டின் கோட்டையை மீட்க படைதிரட்டி வந்து கோட்டையை முற்றுகை இடுகிறான். கொதிக்கு சோழர் படைகள் உதவிக்கு வந்தனவா, எயினர் தங்கள் இறைமையைப் பெற்றார்களா என்பதே கதை
நடிகர்கள்
- இரணதீர பாண்டியனாக சக்தி மித்திரன்
- கொதியாக சேயோன்
- தேவரடியாராக இராஜலட்சுமி
- பிராமண தேவரடியாராக வைதேகி அமர்நாத்
- தோட்டியாக சப்தசீலன்
- இந்து பூசாரியாக குரு சோமசுந்தரம்[2]
- சந்திரகுமார்
- செம்மலர் அன்னம்
- பெருவீரர்கிள்ளி வேளிர் தலைவியாக சுபத்திரா இராபர்ட்
- சமர்
- விஜய் சேயோன்
தயாரிப்பு
இப்படத்தை கே. ஜே. கணேஷ் தயாரித்துள்ளார். ஞானசெசெருக்கு படத்தை இயக்கிய தரணி ராசேந்திரன் எழுதி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவை அகிலேஷ் காத்தமுத்துவும், படத்தொகுப்பை மகேந்திரன் கணேசனும் கையாண்டுள்ளார்.[3] படத்தின் டீசர் 13 ஏப்ரல் 2022 அன்று வெளியிடப்பட்டது [4] படத்தின் முன்னோட்டம் 2023 ஏப்ரல் 5 அன்று வெளியிடப்பட்டது.[5][6]
இசை
யாத்திசை திரைப்படத்திற்கு சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார்.
வெளியீடு
திரையரங்குகளில்
திரைப்படம் 2023 ஏப்ரல் 21 அன்று வெளியிடப்பட்டது.[7] இதன் திரையரங்குகளுக்கான உரிமையைச் சக்தி பிலிம் பாக்டரி நிறுவனமும், வெளிநாட்டு உரிமையை ஐங்கரன் இண்டர்நேசனலும் பெற்றுள்ளன.[8]
வரவேற்பு
இந்து தமிழ் திசையின் ஒரு விமர்சகர் படத்தின் உரையாடலில் சங்கத் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தியிருப்பதை பாராட்டுகிறார். ஆனால், உரையாடலைப் புரிந்துகொள்வதில் எளிய பார்வையாளர்கள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் எதிர்கொள்வார்கள் என்கிறார். மேலும் போர்க்கள வன்முறைக் காட்சிகள் மிகுந்திருப்பதால், சிறார் மற்றும் பெண் பார்வையாளர்களுக்கு இப்படம் ஏற்றத் தெரிவல்ல என்கிறார். கலை இயக்கம், அக்கால மக்களின் ஆடை அணிகளன்களை காட்டியவிதம் போன்றவற்றை பாராட்டியுள்ளார்.[9]
ஆனந்த விகடனின் ஒரு விமர்சகர் படத்தில் புதுமுகங்கள் பலர் நடித்திருந்தாலும் அவர்களிடம் நடிப்பை நன்கு வாங்கி இருக்கிறார் இயக்குநர் என்கிறார். சக்கரவர்த்தியின் இசை போரின் பிரம்மாண்டத்தையும், வீரியத்தையும் சிறப்பாகக் கொண்டுவந்து சேர்கிறது. பாடல்கள் தனித்துவமாக இருந்தாலும், மனதில் நிற்கவில்லை என்கிறார். போரையும், பாலையையும் காட்சிப்படுத்திய ஒளிப்பதிவாளரை பாராட்டியுள்ளார். "கொற்றவை வழிபாடு, போருக்கான பலியீடுகள், பேரரசிற்கும் இனக்குழுவிற்குமான உறவு, பேரரசின் படைகளில் சிறிய இனக்குக்கள் ஆற்றும் பங்கு, தன்னைத்தானே பலிஇட்டுக் கொள்ளும் நவகண்டம் சாங்கியம், என இதுவரை காட்டப்படாத பழங்கால பழக்க வழக்கங்கள் அனைத்தையும் புனைவாக்கி விறுவிறுப்பான இரண்டாம் பாதியில் சேர்த்திருக்கிறார்கள்." என்கிறார்.[10]தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் லோகேசு பாலச்சந்திரன் படத்திற்கு 3/5 மதிப்பீட்டை அளித்து, "படம் தீவிரமானதும் ஈர்க்கக்கூடியதும் ஆகும்; இன்னும் கொஞ்சம் உணர்ச்சிகள் மற்றும் மோதல்கள் இந்தப் படத்தை வேறு நிலைக்கு உயர்த்தியிருக்கலாம். நடிகர்களின் நடிப்பைப் போலவே கதாபாத்திரங்களும் நன்கு வளர்ந்திருக்கின்றன." என்று எழுதினார்.[11]
மேற்கோள்கள்
- ↑ "Yaathisai trailer packs a punch, netizens call it visually stunning" (in en). https://www.ottplay.com/news/yaathisai-the-pandiyas-to-arrive-before-cholas-the-periodic-film-to-hit-screens-on-this-date/49882d3a6b448.
- ↑ Balachandran, Logesh. "Guru Somasundaram plays priest in period film". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/guru-somasundaram-plays-priest-in-period-film/articleshow/99164515.cms.
- ↑ "Guru Somasundaram's next, Yaathisai" (in en). https://www.cinemaexpress.com/tamil/news/2022/may/11/guru-somasundarams-nextyaathisai-31415.html.
- ↑ "Yaathisai - Official Teaser". https://timesofindia.indiatimes.com/videos/entertainment/regional/tamil/yaathisai-official-teaser/videoshow/98944901.cms.
- ↑ "Trailer Of Yaathisal, Period Drama Based On Pandya Dynasty, To Hit Cinemas On This Date" (in en). 10 April 2023. https://www.news18.com/entertainment/trailer-of-yaathisal-period-drama-based-on-pandya-dynasty-to-hit-cinemas-on-this-date-7513837.html.
- ↑ "Karthik Subbaraj praises Yaathisai director Dharani Rasendran" (in en). https://www.cinemaexpress.com/tamil/news/2023/apr/16/karthik-subbaraj-praises-yaathisai-director-dharani-rasendran-42391.html.
- ↑ "Yaathisai to hit the theatres on this date; Watch trailer" (in en). https://www.cinemaexpress.com/tamil/news/2023/apr/10/yaathisai-to-hit-the-theatres-on-this-date-watch-trailer-42151.html.
- ↑ TeamIH (2023-04-11). "'Yaathisai' Movie Press Meet!!!" (in en-US). https://industryhit.com/t/yaathisai-movie-press-meet/.
- ↑ "யாத்திசை: திரை விமர்சனம்" (in ta). https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/980903-yaathisai-tamil-film-review-chera-chozha-pandyas.html.
- ↑ டீம், விகடன் (in ta). Yaathisai Review: வித்தியாசமான திரைமொழி, தெளிவான அரசியலில் மன்னர் காலக் கதை; `யாத்திசை' படம் எப்படி?. https://cinema.vikatan.com/kollywood/yaathisai-movie-review-a-convincing-tale-with-a-few-technical-shortcomings-but-emerges-as-a-winner. பார்த்த நாள்: 2023-04-24.
- ↑ "Yaathisai Movie Review : A well-crafted historical fiction that deserves a watch". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/yaathisai/movie-review/99632684.cms.