மோசிகண்ணத்தனார்

மோசி கண்ணத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 124

மோசி என்னும் புலவர் அல்லது பெருமகன் வாழ்ந்த ஊர் கண்ணத்தம். இந்தக் கண்ணத்தத்தில் வாழ்ந்த புலவர் கண்ணத்தனார்.

பாடல் சொல்லும் செய்தி

அன்றில்

அன்றில் பறவை ஆணும் பெண்ணுமாய் இணைந்தே வாழும். இன்றாலும் அவற்றில் ஒன்று இறந்துவிட்டால் மற்றொன்று அதனை நினைந்து புலம்பிக்கொண்டே உயிர்வாழும்.

அன்றில் போல் 'புன்கண் வாழ்க்கை' வாழேன்

தலைவன் வராவிட்டால் அவனுக்காக ஏங்கி அழுதுகொண்டே அன்றில் போல வாழ்வது என்பது என்னால் முடியாது. (என் உயிர் போய்விடும்) என்கிறாள் தலைவி.

நெய்தல் நிலத்து எற்பாடு பொழுதில் வாழேன்

எக்கர் என்னும் மோட்டுமணலில் அதிரல் பூ உதிரும். ஈங்கைப் பழமும் கொட்டும். இவை இரண்டுமே வெண்முத்துக்கள் கொட்டிக் கிடப்பது போல் உதிர்ந்து கிடக்கும். அவற்றை நவ்வி இனத்து மான் மேயும். இப்படி மேயும் இடம் நெய்தல். மேயும் காலம் எற்பாடு. (பிற்பகல் 2 மணி முதல் 6 தணி வரை)

இந்த இடத்தில், இந்தக் காலத்தில், நீ இல்லாவிட்டால், தலைவி உயிர்வாழமாட்டாள் என்கிறாள் தோழி. பிரிவு உணர்த்திய தலைவனுக்கு இதனைக் கூறுகிறாள்.

"https://tamilar.wiki/index.php?title=மோசிகண்ணத்தனார்&oldid=12711" இருந்து மீள்விக்கப்பட்டது