மோகமுள் (திரைப்படம்)

மோகமுள் (Mogamul) 1995 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். தி. ஜானகிராமன் எழுதிப் புகழ்பெற்ற புதினம், ஞான ராஜசேகரனால் இயக்கப்பட்டது. ஞான ராஜசேகரன் முதன் முதலாக இயக்கிய படம் இது.[1][2] கருநாடக இசைப் பின்னணி உள்ள கதை என்பதால் இனிய பாடல்கள் நிறைந்தது.

மோகமுள்
இயக்கம்ஞான ராஜசேகரன்
கதைதி. ஜானகிராமன்
இசைஇளையராஜா
நடிப்புஅபிஷேக்
அர்ச்சனா
நெடுமுடி வேணு
விவேக்
வெளியீடு1995
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

அபிஷேக், அர்ச்சனா, நெடுமுடி வேணு முதலியோர் நடித்திருந்தார்கள்.

பாடல்கள்

இப்படத்தின் பாடல்களுக்கு இளையராஜா கருநாடக சங்கீத அடிப்படையில் மிகத் திறனுடன் இசையமைத்திருந்தார். சில பாடல்களும் அவற்றின் அடிப்படையான இராகங்களும் பின்வருமாறு:

இவை தவிர "சங்கீத ஞானமோ" என்னும் தியாகராஜர் கிருதி அதன் அசலான தன்யாசி இராகத்திலேயே அமைந்திருந்தது.

வரவேற்பு

புதிய இயக்குனருக்கான இந்திரா காந்தியின் சிறந்த திரைப்பட விருது என்ற தேசிய விருது இத்திரைப்படத்திற்கு கிடைத்தது.[3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

சங்கீத ஞானமு பக்திவினா - கே. ஜே. யேசுதாஸ் பாடியது பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம்

"https://tamilar.wiki/index.php?title=மோகமுள்_(திரைப்படம்)&oldid=36859" இருந்து மீள்விக்கப்பட்டது