மைத்ரேயி இராமகிருஷ்ணன்

மைத்ரேயி இராமகிருஷ்ணன் (Maitreyi Ramakrishnan, பிறப்பு: திசம்பர் 28, 2001) தமிழ்ப் பின்னணி கொண்ட கனடிய நடிகை ஆவார். இவர் நெவர் ஹேவ் ஐ எவர் என்ற நெற்ஃபிளிக்சு தொடரில் தேவி என்ற பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மைத்ரேயி ராமகிருஷ்ணன்
Maitreyi Ramakrishnan
Maitreyi Ramakrishnan during an interview, August 2021.png
பிறப்புமைத்திரேயி ராமகிருஷ்ணன்
28 திசம்பர் 2001 (2001-12-28) (அகவை 22)
மிசிசாகா, கனடா
கல்விமெடோவேல் இடைநிலைப் பள்ளி
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2020-இன்று

வாழ்க்கைக் குறிப்பு

மைத்ரேயி ஒண்டாரியோ மாநிலத்தில் மிசிசாகா நகரில் ஈழத் தமிழ் பின்னணி கொண்ட பெற்றோருக்குப் பிறந்தார். இவரது பெற்றோர் இலங்கையில் ஈழப் போரினால் பாதிக்கப்பட்டு ஏதிலிகளாக கனடாவில் குடியேறியவர்கள் ஆவர். இதனால் மைத்ரேயி தான் ஒரு தமிழர் மற்றும் கனடியர் என்றே தன்னை அடையாளப்படுத்த விரும்புவதாகவும் இலங்கையர் என்று அடையாளப்படுத்த விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.[1][2][3] இவர் மெடோவேல் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றார். இவர் பாடசாலை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.[4]

பணி

இவர் 2020 நெற்ஃபிளிக்சு தொடரான நெவர் ஹேவ் ஐ எவர் என்ற தொடரில் தேவி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.[4][5] இத்தொடரில் நடிப்பதற்கு விண்ணப்பித்த 15,000 வேட்பாளர்களில் மிண்டி காலிங்கால் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6][7] இத்தொடரில் மைத்ரேயியின் நடிப்பு கனடாவில்[8][9][10] குறிப்பாக அவரது தமிழ் கனடிய அடையாளத்தின் காரணமாகவும்,[11][12][13] குறிப்பிடத்தக்க ஊடக கவனத்தைப் பெற்றது.[14]

2019 ஆம் ஆண்டில், டுடே என்ற அமெரிக்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சி தடைகளை உடைத்து உலகை மாற்றியமைக்கும் 18 சிறுமிகளின் பட்டியலில் இவரையும் பெயரிட்டது.[15][16] இவரது நடிப்பு இந்நிகழ்ச்சியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[17]வெரைட்டி என்ற இதழ் இவரது நடிப்பை ஒரு "அசாதாரண செயல்திறன்" எனப் புகழ்ந்தது.[18][19]

மேற்கோள்கள்

  1. Simonpillai, Radheyan (2019-08-29). "Meet the Tamil-Canadian starring in Mindy Kaling's Netflix series" (in en-us). https://nowtoronto.com/api/content/50ae06f8-c7b8-11e9-9d2e-12f1225286c6/. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Get Used To Saying Maitreyi Ramakrishnan's Name" (in en). 2019-08-30. https://www.huffingtonpost.ca/entry/maitreyi-ramakrishnan-tamil-canadian-identity_ca_5d67eb8ae4b063c341fc4cd7. 
  3. "Meet Maitreyi Ramakrishnan: Star of Mindy Kaling's New Netflix Series" (in en-US). 2019-11-16 இம் மூலத்தில் இருந்து 2020-04-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200422200830/https://www.browngirlmagazine.com/2019/11/maitreyi-ramakrishnan-interview/. 
  4. 4.0 4.1 "How one Mississauga teen beat out 15,000 other girls to star in Mindy Kaling's new Netflix series Never Have I Ever". https://www.theglobeandmail.com/arts/television/article-how-one-mississauga-teen-beat-out-15000-other-girls-to-star-in-mindy/. 
  5. Simonpillai, Radheyan (2020-04-14). "Maitreyi Ramakrishnan talks TikTok drama, sex and embracing Tamil culture" (in en-us) இம் மூலத்தில் இருந்து 2022-01-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220115094420/https://nowtoronto.com/api/content/274c2a2a-7e6e-11ea-9bdd-1244d5f7c7c6/. 
  6. "Maitreyi Ramakrishnan: How I Made It as an Actor - FLARE" இம் மூலத்தில் இருந்து 2020-05-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200525042714/https://www.flare.com/how-i-made-it/maitreyi-ramakrishnan/. 
  7. "'Be that change': Maitreyi Ramakrishnan on starring in Mindy Kaling's new comedy". Aug 30, 2019. https://www.cbc.ca/news/entertainment/ramakrishnan-mindy-kaling-netflix-1.5265663. 
  8. "These were the stories that got Toronto talking in 2019". December 28, 2019. https://www.cbc.ca/news/canada/toronto/toronto-gta-top-stories-2019-cbc-1.5407055. 
  9. "Canadian teen nabs lead role in upcoming Mindy Kaling comedy for Netflix". Jul 10, 2019. https://www.cbc.ca/news/entertainment/canadian-teen-mindy-kaling-netflix-comedy-series-1.5207001. 
  10. "Meet the Mississauga teen who beat out 15,000 actors to star in Mindy Kaling's new show" (in en-US). 2019-09-10. https://torontolife.com/culture/movies-and-tv/meet-the-mississauga-teen-who-beat-out-15000-actors-to-star-in-mindy-kalings-new-show/. 
  11. "Meet Maitreyi Ramakrishnan, The Canadian Teen About To Take Over Netflix" (in en-CA). https://www.refinery29.com/en-ca/maitreyi-ramakrishnan-never-have-i-ever-netflix-who-plays-devi. 
  12. Sarner, Lauren (2020-04-17). "How Mindy Kaling's Netflix show 'Never Have I Ever' found its star" (in en). https://nypost.com/2020/04/17/how-mindy-kalings-netflix-show-never-have-i-ever-found-its-star/. 
  13. Jaime, Angie. ""Never Have I Ever" Stars Promise Real, Messy Teenhood" (in en). https://www.teenvogue.com/story/netflix-never-have-i-ever-messy-teenhood. 
  14. "Meet Maitreyi Ramakrishnan, the Canadian Teen Cast in Mindy Kaling's New Netflix Series" (in en). http://www.ellecanada.com/culture/movies-and-tv/maitreyi-ramakrishnan-mindy-kalings-netflix. 
  15. "Meet the 17-year-old who won an open casting call to star in Mindy Kaling's new show" (in en). 27 September 2019. https://www.today.com/style/maitreyi-ramakrishnan-stars-mindy-kaling-s-new-netflix-show-t162504. 
  16. "Groundbreakers: Celebrating 18 girls under 18 who are changing the world" (in en). https://www.today.com/style/day-of-the-girl-2019. 
  17. Lopez, Kristen; Lopez, Kristen (2020-04-17). "'Never Have I Ever' Review: Newcomer Maitreyi Ramakrishnan Dazzles in Mindy Kaling's Coming-of-Age Comedy" (in en). https://www.indiewire.com/2020/04/never-have-i-ever-review-mindy-kaling-1202223251/. 
  18. Bhavani, Divya Kala (2020-04-20). "'Never Have I Ever' review: Maitreyi makes a mark as Devi" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/review-netflix-never-have-i-ever-by-mind-kaling-starring-maitreyi-ramakrishnan/article31388022.ece. 
  19. Framke, Caroline; Framke, Caroline (2020-04-20). "Netflix's 'Never Have I Ever' From Mindy Kaling and Lang Fisher: TV Review" (in en). https://variety.com/2020/tv/news/never-have-i-ever-netflix-review-mindy-kaling-1234583242/. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மைத்ரேயி_இராமகிருஷ்ணன்&oldid=23608" இருந்து மீள்விக்கப்பட்டது