மைக்கேல்பட்டி ராஜா

மைக்கேல்பட்டி ராஜா (Michaelpatty Raja) 2021ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும்.[1] பிரான்சிஸ். எஸ் இயக்கிய இப்படத்தை ஸ்பெல்பவுண்ட் பிலிம்ஸ் இன்க் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில் நிகேஷ் ராம் , பெர்லீன் பெசானியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ராஜேந்திரன், கோவை சரளா , தம்பி ராமையா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் 19 மார்ச் 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[2][3]

மைக்கேல்பட்டி ராஜா
இயக்கம்பிரான்சிஸ் எஸ்
தயாரிப்புநிகேஷ் ராம்
கதைபிரான்சிஸ் எஸ்
இசைசுதீப் பலநாட்
நடிப்புநிகேஷ் ராம்
பெர்லீன் பெசானியா
இராசேந்திரன்
ஒளிப்பதிவுமனோஜ் பிள்ளை
படத்தொகுப்புராஜா முகமது
கலையகம்ஸ்பெல்பவுண்ட் பிலிம்ஸ் இன்க்
விநியோகம்ஸ்பெல்பவுண்ட் பிலிம்ஸ் இன்க்
வெளியீடுமார்ச்சு 19, 2021 (2021-03-19)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

தயாரிப்பு

இந்த படம் 2017ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அரபு தாகூ என்ற தலைப்பில் அறிவிக்கப்பட்டது. பிரான்சிஸ் அறிமுக இயக்குனராகவும், நிகேஷ் ராம் முன்னணி நடிகராகவும் அறிவிக்கப்பட்டனர். 2012இல் நடந்த உண்மையான நிகழ்வுகளால் படம் ஓரளவு ஈர்க்கப்பட்டது.[4] மைக்கேல்பட்டி ராஜா என்ற தலைப்பு இறுதி செய்யப்படுவதற்கு முன்பு "மைக்கேல்பட்டி ராசாவும் துபாய் ரோஸாவும்" என பெயரிடப்பட்டது.

ஏப்ரல் 2017 இல், தயாரிப்பாளர்கள் துருக்கிய நடிகை பெர்காசர் கோரல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்தனர். ஆனால் இறுதியில் அவர் நடிக்கவில்லை.[5][6] பின்னர் அவருக்கு பதிலாக இந்திய நடிகை பெர்லீன் பெசானியா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[7] இந்தப் படம் பெரும்பாலும் துபாயில் படமாக்கப்பட்டது. துபாயை தளமாகக் கொண்ட பல அரபு, பாக்கித்தான் நடிகர்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.[8]

வெளியீடும் வரவேற்பும்

இந்த படம் 19 மார்ச் 2021 அன்று தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[9]

மாலை மலர் செய்தித்தாளின் விமர்சகர் படத்திற்கு கலவையான விமர்சனத்தை அளித்தார்.[10] 'அர முரசு' செய்தி தளத்தின் விமர்சகர் முரளி படத்தைப் பற்றி "வேடிக்கை" என்று குறிப்பிட்டார்.[11]

மேற்கோள்கள்

  1. "Michaelpatty Raja | மைக்கேல்பட்டி ராஜா". https://www.filmy2day.com/2021/02/michaelpatty-raja.html. 
  2. "மைக்கேல்பட்டி ராஜா - Dinakaran Cinema News". https://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=31203. 
  3. "Michaelpatty Raja - Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/previews/michaelpatty-raja/articleshow/81574879.cms. 
  4. "உண்மை சம்பவத்தை தழுவி". https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2021/mar/14/embrace-the-true-incident-3580721.html. 
  5. Subramanian, Anupama (12 April 2017). "Turkish star Berguzar Korel forays into Kollywood town". https://www.deccanchronicle.com/entertainment/kollywood/120417/turkish-star-berguzar-korel-forays-into-kollywood-town.html. 
  6. "Turkish actress forays into K'town". https://www.newindianexpress.com/entertainment/tamil/2017/apr/20/turkish-actress-forays-into-ktown-1595509.html. 
  7. "மைக்கேல்பட்டி ராஜா" இம் மூலத்தில் இருந்து 2021-10-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211020143754/http://www.dinamalarnellai.com/cinema/news/86699. 
  8. "Arabian tales". 9 March 2021. https://newstodaynet.com/index.php/2021/03/09/arabian-tales/. 
  9. "சிறிய படங்களே இன்று ரிலீஸ் | Today small budget movies only released". 19 March 2021. https://cinema.dinamalar.com/tamil-news/95356/cinema/Kollywood/Today-small-budget-movies-only-released.htm. 
  10. "தொல்லை கொடுக்கும் பேய்... தப்பிக்க முயலும் நாயகன் - மைக்கேல்பட்டி ராஜா விமர்சனம்". 21 March 2021. http://cinema.maalaimalar.com/cinema/review/2021/03/21185549/2460899/Tamil-cinema-michealpatty-raja-movie-review-in-tamil.vpf. 
  11. "தொல்லை கொடுக்கும் பேய்; தப்பிக்க முயலும் நாயகன்; மைக்கேல்பட்டி ராஜா விமர்சனம்". 23 March 2021 இம் மூலத்தில் இருந்து 24 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211024025803/https://aramurasu.lk/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a4/. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மைக்கேல்பட்டி_ராஜா&oldid=36841" இருந்து மீள்விக்கப்பட்டது