மே ஜார்ஜ்

மே ஜார்ஜ் (May George) என்பவர் சென்னை மாகாணத்தின் முதல் பெண் பொறியாளர் மற்றும் பெண்ணிய செயற்பாட்டாளருமாவார்.[1] இவர் கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்து 1945 இல் பொறியாளர் ஆனார். மாநில வீட்டு வசதி வாரியத்தின் முதல் தொழில்நுட்ப அலுவலராகச் செயல்பட்ட அவர். பின்னர் தலைமைப் பொறியாளராகவும் உயர்ந்தார். சி.ஐ.டி நகர், சிந்தாதிரிப்பேட்டை, பெரம்பூர், மணலி போன்ற சென்னையின் முக்கியப் பகுதிகளில் இவரது பதவிக் காலத்தில்தான் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் கட்டப்பட்டன. மாநிலத்தில் தொடங்கப்பட்ட பெண்களுக்கான முதல் பாலிடெக்னிக்கின் முதல் முதல்வராகவும் இவர் செயல்பட்டுள்ளார். சமூகப் பணியாளராகவும் பெண்ணுரிமைச் செயல்பாட்டாளராகவும் இருந்தார்.[2]

மேற்கோள்

"https://tamilar.wiki/index.php?title=மே_ஜார்ஜ்&oldid=27663" இருந்து மீள்விக்கப்பட்டது