மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் கோயில்
மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் கோயில் (திருவலம்புரம்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 44ஆவது சிவத்தலமாகும். காவிரியாற்றின் வலப்பக்கம் அமைந்துள்ளதால் திருவலம்புரம் எனப்பெயர் பெற்றது.
தேவாரம் பாடல் பெற்ற திருவலம்புரம் வலம்புரநாதர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருவலம்புரம் |
பெயர்: | திருவலம்புரம் வலம்புரநாதர் திருக்கோயில் |
அமைவிடம் | |
மாவட்டம்: | மயிலாடுதுறை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | வலம்புரநாதர் |
தாயார்: | வடுவகிர்க்கண்ணி |
தல விருட்சம்: | பனை |
தீர்த்தம்: | பிரமதீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுவர்ண பங்கஜ தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், அப்பர். சுந்தரர் |
அமைவிடம்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், அப்பர். சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இறைவன், இறைவி
இக்கோயிலில் உள்ள இறைவன் வலம்புரநாதர்,இறைவி வடுவகிர்க்கண்ணி.
அமைப்பு
மாடக்கோயில் அமைப்பில் உள்ள இக்கோயில் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளது. விநாயகர், பலிபீடம், நந்தி மண்டபத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது இடப்புறத்தில் வடுவகிர்க்கண்ணி அம்மன் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. கருவறையில் மூலவர் வலம்புர நாதர் உள்ளார். மூலவர் தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் ஏரண்டமுனிவர், பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி, விநாயகர், சேதுபரமேஸ்வரர், அப்பர், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், மாணிக்கவாசகர், தட்சிணமகாராஜா, ராணி, தாருகாவனத்தில் ராமர் பூசை செய்த ராமநாதர், தாருகாவனத்தில் லட்சுமணர் பூசை செய்த விசுவநாதர்,வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், கஜலட்சுமி ஆகியோர் உள்ளனர். இத்தலத்தின் மரம் பனை மரம் ஆகும்.
சிறப்பு
இத்தலத்தில் திருமால் வழிபட்டு வலம்புரிச் சங்கு பெற்றார் என்பது தொன்நம்பிக்கை.