மேற்குத் தொடர்ச்சி மலை (திரைப்படம்)

மேற்குத் தொடர்ச்சி மலை (Merku Thodarchi Malai) (English: English: Western Ghats) என்பது அறிமுக இயக்குநர் லெனின் பாரதியால் இயக்கப்பட்டு, 2018 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் விஜய் சேதுபதி ஆவார். இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் புதுமுகங்கள் நடித்திருந்தனர். இப்படத்தின் ஒளிப்பதிவு தேனி ஈஸ்வர் என்பவராலும், இசை இளையராஜாவாலும் மேற்கொள்ளப்பட்டது.[1][2] இத்திரைப்படம் கேரளாவில் நடைபெற்ற 21 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[3] பஞ்சாபில் நடைபெற்ற பயாஸ்கோப் உலக திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதினைப் பெற்றது.[4]

மேற்குத் தொடர்ச்சி மலை (Western Ghats)
இசைஇளையராஜா
நடிப்புஆண்டனி
காயத்ரி கிருஷ்ணா
அபு வளையங்குளம்
ஒளிப்பதிவுதேனி ஈஸ்வர்
படத்தொகுப்புமு. காசி விஸ்வநாதன்
வெளியீடு2018 (US)
24 ஆகத்து 2018 (இந்தியா)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திருச்சூரில் நடைபெற்ற 12 ஆவது சர்வதேசத் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் கே. டபிள்யூ. ஜோசப் அலியின் பெயரால் வழங்கப்படும் இந்திய அளவிலான சிறந்த அறிமுக இயக்குநரின் திரைப்படத்திற்கான போட்டியில் கலந்து கொண்டு கே. டபிள்யூ. ஜோசப் விருதினைப் பெற்றது. இத்திரைப்படம் 17 ஆம் நியூ யார்க் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான பிரிவிற்குப் போட்டியிட தேர்வு செய்யப்பட்டது.[5]

இத்திரைப்படம் சிங்கப்பூர் தெற்காசிய சர்வதேச திரைப்பட விழா மற்றும் சிகாகோ தெற்காசிய திரைப்பட விழா ஆகியவற்றிற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டது.[6]

மேற்கோள்கள்

  1. "Isaignani for Vijay Sethupathi". The Times of India. 24 November 2017. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/Isaignani-for-Vijay-Sethupathi/articleshow/45257048.cms. 
  2. "Vijay Sethupathy gets Ilayaraja's 1001th (sic!) movie". Indiaglitz. 5 January 2015. http://www.indiaglitz.com/vijay-sethupathy-gets-ilayarajas-1001th-movie-tamil-news-122472. 
  3. "18 Indian films selected for 21st IFFK" (in English). Manoramaonline.com. 8 October 2016. http://english.manoramaonline.com/entertainment/entertainment-news/18-indian-films-selected-for-21st-iffk.html. பார்த்த நாள்: 10 October 2016. 
  4. Suganth, M (15 November 2017). scriptography/articleshow/55415823.cms "Merku Thodarchi Malai wins award for its scriptography". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/latest-kollywood-news-tamil-movies-news-reviews-kollywood-movies/Merku-Thodarchi-Malai-wins-award-for-its scriptography/articleshow/55415823.cms. பார்த்த நாள்: 15 November 2017. 
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2018-08-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180814232924/http://www.iaac.us/nyiff2017/schedule.htm. 
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2018-08-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180827011222/http://www.ffif.fr/wp-content/uploads/2018/03/D%C3%A9pliant-A4-Cine-Indien.pdf.