மூன்று பிள்ளைகள்

மூன்று பிள்ளைகள் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். நாகேந்திர ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, ஜெமினி கணேசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மூன்று பிள்ளைகள்
இயக்கம்ஆர். நாகேந்திர ராவ்
தயாரிப்புஎஸ். எஸ். வாசன்
இசைபி. எஸ். ஆனந்த ராமன்
நடிப்புஎம். கே. ராதா
சிறீராம்
ஜெமினி கணேசன்
ஆர். நாகேந்திரராவ்
சந்திரபாபு
பி. கண்ணாம்பா
சூர்யப்பிரபா
வனஜா
சுந்தரிபாய்
வெளியீடுசூலை 11, 1952
நீளம்15528 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படம் 1940 ஆம் ஆண்டில் வெளிவந்த "த வே ஒஃப் ஓல் பிளெஷ்" (The Way of All Flesh) என்ற ஹாலிவுட் திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. நாகேந்திர ராவ், கண்ணாம்பா ஆகியோரின் பிள்ளைகளாக எம். கே. ராதா, ஜெமினி கணேசன், சிறீராம் ஆகியோரும் இவர்களின் மனைவிகளாக சூர்யப்பிரபா, குமாரி வனஜா, சாசுவதி ஆகியோரும் நடித்திருந்தனர். ஜே. பி. சந்திரபாபு இத்திரைப்படத்தில் ஒரேயொரு காட்சியில் ஜெமினி ஸ்டூடியோவுக்கு முன்னால் தற்கொலை செய்து கொள்பவராக வருகிறார்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=மூன்று_பிள்ளைகள்&oldid=36776" இருந்து மீள்விக்கப்பட்டது