மு. மணிவெள்ளையன்

மு. மணிவெள்ளையன் (பிறப்பு: ஏப்ரல் 15 1948) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் காப்புறுதி முகவராவார். மேலும் இவர் "தமிழியம்" இதழின் ஆசிரியராகவும், உலகப் பண்பாட்டு இயக்கப் பொதுச் செயலாளராகவும், "திருக்குறள்" நெறி பரப்புநராகவும் கடமையாற்றியுள்ளார்.

மு. மணிவெள்ளையன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
மு. மணிவெள்ளையன்
பிறந்ததிகதி ஏப்ரல் 15 1948
அறியப்படுவது எழுத்தாளர்

எழுத்துத் துறை ஈடுபாடு

1966 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் வணிகவியல், குறளியம் மற்றும் சமுதாயச் சிந்தைனைக் கட்டுரைகளே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

  • "காப்புறுதி விற்பனை முகவர் வழிகாட்டி" (1980)
  • "காப்புறுதியும் விற்பனை முகவரும்" (1984)
  • "வருமானவரியும் சொத்து வரியும்" (1985)

நினைவுமலர் தொகுப்புகள்

  • "பெரியார் நூற்றாண்டு விழா மலர் (1977)
  • "பாவேந்தர் நூற்றாண்டு மலர்" (1991)
  • "இராவண காவிய கருத்தரங்கு மலர்" (1992)

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=மு._மணிவெள்ளையன்&oldid=6389" இருந்து மீள்விக்கப்பட்டது