மு. பிச்சைக்கனி

மு. பிச்சைக்கனி (பிறப்பு: சனவரி 2 1947) இவர் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலுக்கருகிலுள்ள புதூர் எனும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் அன்னவாசல் அரசினர் தொடக்கப் பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கி பின்பு பர்மா (மியன்மார்) தலைநகர் ரங்கூனுக்குச் சென்று புனித கேப்ரியல் எஸ்.பி.ஜே. பள்ளியில் இணைந்து கற்று பின்னர் தமிழகம் திரும்பி, திருச்சி ஜமால் முகமது கல்லூரியிலும், விருதுநகர் வி.எச்.என்.எஸ்.என். கல்லூரியிலும் கல்வி கற்று இரசாயனத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். வணிகம், கணினிக் கணக்கு நிர்வாகம் போன்ற துறைகளில் டிப்ளோமா பெற்றுள்ள இவர் தமிழ், இந்தி, உருது, ஆங்கிலம், அரபி, பர்மிய மொழிகளை கற்றறிந்தவராவார்.

மு. பிச்சைக்கனி
இயற்பெயர்/
அறியும் பெயர்
மு. பிச்சைக்கனி
பிறந்ததிகதி சனவரி 2 1947
பிறந்தஇடம் புதூர்,
புதுக்கோட்டை மாவட்டம்
தமிழ்நாடு
அறியப்படுவது எழுத்தாளர்

இலக்கியப் பணி

1963ல் எழுத்துலகில் பிரவேசித்த இவரின் முதல் சிறுகதையான 'ஆ!!! நீயா?' எனும் தலைப்பில் பர்மிய நாளிதழில் வெளியானது. இதனைத் தொடர்ந்து சிறுகதை, கவிதை ஆகிய துறைகளில் கூடிய ஆர்வம் காட்டிவந்துள்ளார். மேலும் கல்கி இதழில் வெளியான ஸ்ரீகாஞ்சி சங்கராச்சாரியாரின் ஒரு பக்கக் கட்டுரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார்.

வகித்த பதவிகள்

தமிழகத்தில் தமிழ் இக்கிய மன்றத்தின் செயலாளராகவும், 1997ல் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் உறுப்பினராகவும், விருதுநகர் வி.எச்.என்.எஸ்.என். கல்லூரியின் வெள்ளிவிழா மலரைத் தயாரிப்பதற்கு பொறுப்பாளராகவும் இருந்துள்ளார்.

உசாத்துணை

  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு
"https://tamilar.wiki/index.php?title=மு._பிச்சைக்கனி&oldid=5581" இருந்து மீள்விக்கப்பட்டது