மு. சரவணன்
டத்தோ முருகன் சரவணன் எனும் எம். சரவணன் (ஆங்கிலம்: Murugan Saravanan அல்லது M. Saravanan), மலேசியத் தமிழ் அரசியல்வாதி ஆவார். மலேசியா, பேராக், தாப்பா மக்களவைத் தொகுதி உறுப்பினராக உள்ளார். இவர் 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற 12-ஆவது பொதுத் தேர்தலில் இருந்து 2022-ஆம் ஆண்டு 15-ஆவது பொதுத் தேர்தல் வரையில் இந்தத் தொகுதியைத் தொடர்ந்து தக்க வைத்துள்ளார்.
மாண்புமிகு டத்தோ ஸ்ரீ மு. சரவணன் YB Saravanan Murugan மலேசிய மக்களவை உறுப்பினர் SMW; DMSM; AMN; MP | |
---|---|
2020-இல் சரவணன் | |
மலேசிய மனிதவள அமைச்சர் | |
பதவியில் 30 ஆகஸ்டு 2021 – 24 செப்டம்பர் 2022 | |
அரசர் | சுல்தான் அப்துல்லா |
பிரதமர் | இசுமாயில் சப்ரி யாகோப் |
பின்வந்தவர் | வி. சிவகுமார் |
தொகுதி | தாப்பா மக்களவைத் தொகுதி |
பதவியில் 10 மார்ச் 2020 – 16 ஆகஸ்டு 2021 | |
அரசர் | சுல்தான் அப்துல்லா |
பிரதமர் | முகிதீன் யாசின் |
முன்னவர் | எம். குலசேகரன் |
தொகுதி | தாப்பா மக்களவைத் தொகுதி |
மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை துணை அமைச்சர் | |
பதவியில் 16 மே 2013 – 9 மே 2018 | |
பிரதமர் | நஜீப் ரசாக் |
தொகுதி | தாப்பா மக்களவைத் தொகுதி |
மலேசிய கூட்டாட்சிப் பகுதிகளின் துணை அமைச்சர் | |
பதவியில் 9 ஏப்ரல் 2009 – 15 மே 2013 | |
பிரதமர் | நஜீப் ரசாக் |
தொகுதி | தாப்பா மக்களவைத் தொகுதி |
மலேசிய கூட்டாட்சிப் பகுதிகளின் துணை அமைச்சர் | |
பதவியில் 19 மார்ச் 2008 – 9 ஏப்ரல் 2009 | |
பிரதமர் | அப்துல்லா அகமது படாவி (2008–2009) நஜீப் ரசாக் (2009) |
தொகுதி | தாப்பா மக்களவைத் தொகுதி |
தாப்பா மக்களவைத் தொகுதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 8 மார்ச் 2008 | |
பெரும்பான்மை | 3,020 (2008) 7,927 (2013) 614 (2018) 5,064 (2022) |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | சரவணன் முருகன் 4 பெப்ரவரி 1968 செந்தூல், கோலாலம்பூர், மலேசியா |
அரசியல் கட்சி | மஇகா (MIC) |
பிற அரசியல் சார்புகள் |
பாரிசான் நேசனல் (BN) பெரிக்காத்தான் நேசனல் (PN) பாக்காத்தான் அரப்பான்] (PH) |
வாழ்க்கை துணைவர்(கள்) | கவிதா விவேகானந்தன்[1] |
பிள்ளைகள் | 3 |
பணி | அரசியல்வாதி |
இணையம் | msaravanan68 |
1 மார்ச் 2020 -இல் நடந்த மலேசிய அரசியல் மாற்றத்தினால், முகிதீன் யாசின் பிரதமராக அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, 9 மார்ச் 2020 அன்று டத்தோ மு. சரவணன் மலேசிய மனிதவள அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதுவே அவர் அமைச்சர் பதவிக்கான முதல் நியமனமாகும்.
பொது
இவர் பாரிசான் நேசனல் கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான மலேசிய இந்திய காங்கிரசு (மஇகா) கட்சியின் உறுப்பினர்; மற்றும் அக்கட்சியின் துணைத் தலைவரும் ஆவார். மார்ச் 2020 முதல் நவம்பர் 2022 வரை, இவர் ம.இ.கா.வின் ஒரே அமைச்சராகவும், 2018 பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு மஇகா வேட்பாளர்களில் ஒருவராகவும்; 2022 பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மஇகா வேட்பாளராகவும் இருந்தார்.[2]
சரவணன் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை 1994-இல், தித்திவங்சா மாவட்ட மஇகா கிளையின் செயலாளராகத் தொடங்கினார். மலேசிய அரசியலில் தீவிரமாகப் பங்கேற்பதற்கு முன்பு, இவர் ஓர் அலுவலகப் பையனாகவும்; பின்னர் மலேசிய காவல் துறையின் பணியாளராகவும்; மேலும் ஒரு வணிக நிறுவனத்தின் நிர்வாகியாகவும் பணியாற்றி உள்ளார்.
வாழ்க்கை வரலாறு
கோலாலம்பூர் செந்தூல் பகுதியில் உள்ள பெகெலிலிங் அடுக்கு மாடி குடியிருப்பில் பிறந்து வளர்ந்தவர். இவரின் தந்தையார் ரப்பர் மரம் சீவும் தொழிலாளி; தாயார் ஒரு குடும்பமாது. சரவணன் குடும்பத்தில் ஒரே ஆண்பிள்ளை. குடும்பத்தில் பொருளாதார நெருக்கடிகள் இருந்தபோதிலும், சரவணனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவர் கல்வியில் கவனம் செலுத்துவதில் பெற்றோர் உறுதியாக இருந்தனர்.
1975 - 1980-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், கோலாலம்பூரில் உள்ள பிளெட்சர் சாலை தமிழ்ப்பளியில் தன் தொடக்கக் கல்வியைப் பெற்றார். அதன்பின்னர் 1981 - 1986 வரை கோலாலம்பூர் தித்திவங்சா இடைநிலைப்பள்ளியில் மேல்நிலைப்பள்ளிப் படிப்பை பெற்றார்.
உயர்நிலைக் கல்வி
மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடிக்கும் கட்டத்தில், அவரின் தந்தை காலமானார். குடும்பச் சுமையின் காரணமாக சரவணன் பகலில் வேலை செய்தார். இரவில் படிப்பில் கவனம் செலுத்தினார். கோலாலம்பூரில் ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்து இரவில் தன் மேல்படிப்பைத் தொடர்ந்தார்.[3]
இந்தக் கட்டத்தில், மஇகாவின் முன்னாள் பொதுச்செயலாளர் டி,பி, விஜேந்திரன், மைக்கா ஓல்டிங்ஸ் நிறுவனத்தில் சரவணனுக்கு ஒருவேலை கிடைப்பதற்கு உதவினார். அந்த வகையில் அவர் மைக்கா ஓல்டிங்ஸ் நிறுவனத்தில் ஓர் அலுவலகப் பையனாக வேலையில் சேர்ந்தார்.[4][5]
பட்டப்படிப்பு
1989-ஆம் ஆண்டில் இருந்து 1993-ஆம் ஆண்டு வரையில், இவர் இங்கிலாந்தில் உள்ள எமர்ஸ்மித் & வெஸ்ட் இலண்டன் கல்லூரியில் (Hammersmith & West London College) வணிக நிர்வாகம் படிக்க இலண்டன் சென்றார். மூன்றாண்டுகளுக்குப் பின்னர் அவர் இளங்கலைப் பட்டம் பெற்றார். மலேசியா திரும்பியதும், ஈசி கால் பேஜர்ஸ் (Easy Call Pagers) எனும் நிறுவனத்தில் வணிகத் துறை அதிகாரியாகத் தன் பதவியைத் தொடங்கினார்.[6]I
பின்னர் 2018-ஆம் ஆண்டில், ஸ்காட்லாந்தின் மேற்கு பல்கலைக்கழகத்தில் (University of the West of Scotland) தன் வணிக நிர்வாகப் படிப்பைத் தொடர்ந்து, 2022-ஆம் ஆண்டில் முதுகலை பட்டத்தைப் பெற்றார்.[7]
அரசியல் வாழ்க்கை
மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப் படுவதற்கு முன்பு இவர் மலேசிய மேலவையின் செனட்டராக நியமிக்கப்பட்டார். 2008-ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், அவர் தாப்பா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இருப்பினும், அந்தத் தேர்தலில் மலேசிய இந்திய காங்கிரசு பரவலான தோல்வியைச் சந்தித்தது. மலேசிய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மஇகா உறுப்பினர்கள் மூவரில் சரவணனும் ஒருவர் ஆவார்.
மலேசிய நாடாளுமன்றத்தில் அவரின் கட்சி மூன்று இடங்களைப் பெற்று இருந்தாலும், ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணி, அவருக்கு துணை அமைச்சர் பதவியை வழங்கியது. 2008 முதல் 2013 வரை அவர் மலேசிய கூட்டாட்சிப் பகுதிகளின் துணை அமைச்சராகப் பதவி வகித்தார்.[8]
தேர்தல் முடிவுகள்
# | தொகுதி | வேட்பாளர் | வாக்குகள் | % | எதிரணி | வாக்குகள் | % | வாக்குப் பதிவு | பெரும் பான்மை |
வாக்கு அளித்தவர்கள் | ||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
2008 | P072 தாப்பா, பேராக் | மு. சரவணன் (மஇகா) | 14,084 | 52.53% | தான் செங் தோ Tan Seng Toh (பிகேஆர்) |
11,064 | 41.27% | 26,811 | 3,020 | 70.12% | ||
2013 | மு. சரவணன் (மஇகா) | 20,670 | 55.91% | வசந்த குமார் (K. Vasantha Kumar (பிகேஆர்) |
12,743 | 34.48% | 36,957 | 7,927 | 81.30% | |||
சருசாமான் பிசுதாமான் (Shaharuzzaman Bistamam (பெர்ஜாசா) |
2,053 | 5.56% | ||||||||||
ரிசுவான் பானி (Ridzuan Bani (சுயேச்சை) |
337 | 0.91% | ||||||||||
2018 | மு. சரவணன் (மஇகா) | 16,086 | 44.47% | முகமது அசுனி முகமது (Mohd Azni Mohd Ali) (பெர்சத்து) |
15,472 | 42.77% | 37,113 | 614 | 78.75% | |||
நோரசுலி மூசா (Norazli Musa) (பாஸ்) |
4,615 | 12.76% | ||||||||||
2022 | மு. சரவணன் (மஇகா) | 18,398 | 41.36% | சரசுவதி கந்தசாமி (Saraswathy Kandasami) (பிகேஆர்) |
13,334 | 29.98% | 44,481 | 5,064 | 71.81% | |||
முகமது யாட்சான் (Muhammad Yadzan Mohamad) (பெர்சத்து) |
12,115 | 27.24% | ||||||||||
மியோர் அயிடிர் சுகைமி (Mior Nor Haidir Suhaimi) (தாயக இயக்கம்) |
335 | 0.75% | ||||||||||
முகமது அக்பர் சரிப் (Mohamed Akbar Sherrif Ali Yasin) (வாரிசான்) |
200 | 0.45% | ||||||||||
கதிரவன் (M.Kathiravan) (சுயேச்சை) |
99 | 0.22% |
ஆண்டு | தேசிய முன்னணி | வாக்குகள் | வீதம் | எதிர்க்கட்சி | வாக்குகள் | வீதம் | ||
---|---|---|---|---|---|---|---|---|
2008 | மு. சரவணன் (ம.இ.கா) | 14,084 | 53% | தான் செங் தோ (கெடிலான்) | 11,064 | 41% |
விருதுகள்
மலேசிய விருதுகள்
- மலேசியா
- - Order of the Defender of the Realm (AMN) (1998)[12]
- மலாக்கா :
- - Exalted Order of Malacca (DMSM) – டத்தோ (2006)
- கோலாலம்பூர் :
- - Order of the Territorial Crown (PMW) – டத்தோ (2014)[12][13]
- - Order of the Territorial Crown (SMW) – டத்தோ ஸ்ரீ (2019)
மேற்கோள்கள்
- ↑ "Court Allows Saravanan To Strike Out Former Business Partner's Application". Bernama. 13 April 2010 இம் மூலத்தில் இருந்து 29 June 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110629124439/http://www.bernama.com/bernama/v3/news_lite.php?id=490224.
- ↑ "M. Saravanan, Y.B. Datuk". Parliament of Malaysia இம் மூலத்தில் இருந்து 29 January 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110129180230/http://www.parlimen.gov.my/index.php?modload=ahlidewan&uweb=dr&action=details&id=49.
- ↑ "University of Wales Trinity Saint David" இம் மூலத்தில் இருந்து 8 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200608104233/https://www.uwtsd.ac.uk/.
- ↑ "Laman Utama" இம் மூலத்தில் இருந்து 9 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200609193812/http://www.rmp.gov.my/.
- ↑ "Bloomberg - MAIKA Holdings". Bloomberg L.P. இம் மூலத்தில் இருந்து 7 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200607150020/https://www.bloomberg.com/profile/company/2251777Z:MK.
- ↑ "EasyCall Malaysia Sdn Bhd - Paging Services in Kuala Lumpur" இம் மூலத்தில் இருந்து 7 June 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200607144105/http://my6513-easycall-malaysia-sdn-bhd.contact.page/.
- ↑ "Home - University of Wales" இம் மூலத்தில் இருந்து 31 August 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090831063408/http://www.wales.ac.uk/.
- ↑ "Vote for the President's Men, Says Samy Vellu". Bernama. 10 September 2009 இம் மூலத்தில் இருந்து 16 October 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091016180711/http://www.bernama.com/bernama/v5/newspolitic.php?id=439513.
- ↑ "Keputusan Pilihan Raya Umum Parlimen/Dewan Undangan Negeri". Election Commission of Malaysia இம் மூலத்தில் இருந்து 6 September 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110906083741/http://semak.spr.gov.my/spr/laporan/5_KedudukanAkhir.php. Percentage figures based on total turnout.
- ↑ "Malaysia General Election". undiinfo Malaysian Election Data (Malaysiakini) இம் மூலத்தில் இருந்து 1 December 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201201233203/https://undi.info/. Results only available from the 2004 Malaysian general election.
- ↑ "Malaysia Decides 2008". The Star (Malaysia) இம் மூலத்தில் இருந்து 11 January 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100111075207/http://thestar.com.my/election/..
- ↑ 12.0 12.1 "Semakan Penerima Darjah Kebesaran, Bintang dan Pingat". Bahagian Istiadat dan Urusetia Persidangan Antarabangsa (Prime Minister's Department (Malaysia)) இம் மூலத்தில் இருந்து 15 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210115122059/http://www.istiadat.gov.my/semakan-penerima-darjah-kebesaran-bintang-dan-pingat/.
- ↑ L. Suganya (1 February 2014). "Some 320 individuals awarded in conjunction with Federal Territories Day". The Star இம் மூலத்தில் இருந்து 31 January 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140131221712/http://www.thestar.com.my/News/Nation/2014/02/01/Some-320-individuals-receive-FT-awards/.
வெளி இணைப்புகள்