முள்ளூர்

சங்ககாலத்தில் முள்ளூர் அரசன் மலையமான் திருமுடிக்காரி.
பெண்ணையாற்றுப் படுகையிலுள்ள முள்ளூர் பொருநன் மலையமான் திருமுடிக்காரி. [1]
இவன் சிறந்த வேல் வீரன். [2]
முள்ளூர் மலையை ஆரியர் படை தாக்கியது. அந்தப் படை மலையனின் ஒரு வேலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடியது [3]
முள்ளூர் மன்னன் ஆனிரை கவர்ந்துவந்தான்[4]
முள்ளூர் மாமலை “பொய்யா நாவின் கபிலன் பாடிய” சிறப்பு மிக்கது. பல போர்களில் வென்றி கண்ட வானவன் இம்மலைமீது படைநடத்திப் போரிட்டான். மலையமான் திருமுடிக்காரி அப்படையை முறியடித்து அந்த மலைமீது புலிக்கொடியைப் பொறித்துக்கொண்டான். [5]
முள்ளூர் மன்னன் மலையமான் திருமுடிக்காரி தேர்களை மிகுதியாக வழங்கினான். [6]
முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி வல்வில் ஓரியைக் கொன்று அவனது கொல்லிமலை நாட்டைச் சேரலர்களுக்கு அளித்தான்.[7]

அடிக்குறிப்பு

  1. மாறோக்கத்து நப்பசலையார் புறம் 126
  2. செவ்வேல் மலையன் முள்ளூர் - கபிலர் குறுந்தொகை 312
  3. நற்றிணை 170
  4. கபிலர் நற்றிணை 291
  5. மாறோக்கத்து நப்பசலையார் புறம் 174
  6. கபிலர் புறம் 123
  7. கல்லாடனார் அகம் 209
"https://tamilar.wiki/index.php?title=முள்ளூர்&oldid=17504" இருந்து மீள்விக்கப்பட்டது