முல்லை தங்கராசன்
முல்லை தங்கராசன் என்பவர் தமிழ் எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியராவார்.பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஜமீன் ஊத்துக்குளியைச் சேர்ந்த இவர் வாகன ஓட்டுநராகத் தன் வாழ்க்கையைத் துவக்கியவர் முல்லை தங்கராசன். இவர் மாயாஜாலக் கதைகள் எழுதுவதிலும் தனிச்சிறப்பு பெற்றவர். தமிழ் சிறார் காமிக்ஸ் உலகில் குறிப்பிடத்தக்க சாதனையாளர் முல்லை தங்கராசன். இவர் முதலில் டிரைவர் என்ற மாத இதழை நடத்தினார். நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கான குறிப்புகள், சாலை விதிகள் உள்ளிட்ட விஷயங்களைத் தாங்கிவந்த இதழ் அது.[1] 1970 களில் வெளிவந்த மணிப்பாப்பா (1976), ரத்னபாலா (1979) என்கிற இரண்டு பிரபல சிறார் இதழ்களுக்கு ஆசிரியராகச் செயல்பட்டார். முத்து காமிக்ஸ் நிறுவனத்தில் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்தார். அந்நிறுவனத்திலிருந்து வெளியே வந்த பின்னர் மாயாவி என்ற பெயரில் காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்டார். இவர் ஆசிரியராக இருந்த சிறார் இதழ்களில் சுவாரசியமான, நகைச்சுவையான, சாகசக் கதைகள் வெளியாகின.[2]
மேற்கோள்கள்
- ↑ கிங் விஸ்வா. "விற்பனைக்கு வந்த தாத்தாவின் பொக்கிஷம்!". கட்டுரை (தி இந்து). http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D/article6093313.ece. பார்த்த நாள்: 20 நவம்பர் 2016.
- ↑ ஆதி வள்ளியப்பன் (15 நவம்பர் 2016). "சிறார் இலக்கியச் சாதனையாளர்கள்". கட்டுரை (தி இந்து). http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article9347693.ece. பார்த்த நாள்: 20 நவம்பர் 2016.