முருகேசு சுவாமிகள்

முருகேசு சுவாமிகள் என அழைக்கப்பட்ட சுவாமி ஆர். கே. முருகேசு (ராமன் காளிமுத்து முருகேசு, அக்டோபர் 26, 1933 - செப்டம்பர் 24, 2007) இலங்கையின் இந்து ஆன்மீகவாதிகளில் ஒருவர். காயத்திரிச் சித்தர் என அனைவராலும் போற்றப்பட்ட இவர் இலங்கையின் நுவரெலியா நகரில் வாழ்ந்தவர். நுவரெலியா நகரில் அமைந்துள்ள இலங்காதீஸ்வரர் ஆலயம் மற்றும் காயத்திரி பீடம் என்பன இவரால் நிறுவப்பட்டவை.

முருகேசு சுவாமிகள்
Murugesu swami.jpg
பிறப்புராமன் காளிமுத்து முருகேசு
(1933-10-26)அக்டோபர் 26, 1933
கண்டி, இலங்கை
இறப்புசெப்டம்பர் 24, 2007(2007-09-24) (அகவை 73)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
கல்லறைகாயத்திரி பீடம், நுவரெலியா, இலங்கை
இருப்பிடம்நுவரெலியா, இலங்கை
மற்ற பெயர்கள்கலாநிதி ஆர். கே. முருகேசு , சுவாமி முருகேசு, முருகேசு மஹரிஷி
அறியப்படுவதுஆன்மீகவாதி

வாழ்க்கைக் குறிப்பு

முருகேசு சுவாமிகள் 1933ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் நாள் இலங்கையின் மத்திய மாகாணத்தின், கண்டி மாநகரில் இராமன் காளிமுத்து - சந்தனம்மா தம்பதிகளுக்கு மூத்த புதல்வனாகப் பிறந்தார். அவர் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்ததனால், தமது இளம் பிராயத்திலேயே பல்வேறு கூலி வேலைகளுக்கும் செல்ல நேர்ந்தது. அவ்வாறான ஓர் சந்தர்ப்பத்திலேயே சுவாமிகளுக்கு ஓர் மகாத்மா காட்சியளித்து, கணபதி மந்திரங்கள் அடங்கிய நூல் ஒன்றினையும் வழங்கினார். அன்றுமுதல் சுவாமிகள் தினமும் அந்த மந்திரங்களை செபிக்க ஆரம்பித்தார்.

குரு

சுவாமிகள் பின்னாளில் இந்தியாவிற்கு சென்று பண்டிதர் கண்ணையா யோகி மகரிஷிகளை தமது சற்குருவாக ஏற்று ஆத்மஞானத்தினை பயின்றார். சுவாமிகள் தமது குருவின் கட்டளைப்படி காயத்திரி மந்திரத்தினை கற்று, ஆராய்ந்து, அறிந்து பாண்டித்தியம் பெற்றதனால், காயத்திரி சித்தர் என அழைக்கப்படலானார். அத்துடன் தமது ஆராய்ச்சியின் முடிவுகளை பல நூல்களில் எழுதியுமுள்ளார்.

ஆன்மீகப் பணி

சுவாமிகள் இந்திய நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, காடுகள், மலைகள், குகைகளில் பல சித்தர்கள், முனிவர்கள், மஹரிஷிகளை கண்டு வணங்கி அவர்களிடமிருந்து பல்வேறு சித்திகளையும் கைவரப் பெற்றார். பின் தன் தாயகம் திரும்பி, ஆன்மீகப் பணிகளை தொடர்ந்தார். அவற்றுள் சுவாமிகளால் நிறுவப்பட்ட நுவரெலியா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலயம் மற்றும் ஸ்ரீ காயத்திரி பீடம் என்பன முக்கியமானவை. அது மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கோயில்கள், ஆச்சிரமங்கள், காயத்திரி பீடங்கள் என பலவற்றையும் நிறுவியுள்ளார். இவற்றுள் மட்டக்களப்பு நாவலடியில் உள்ள சப்தரிஷி மண்டபம் பிரசித்தமானது.

சீடர்கள்

முருகேசு சுவாமிகள் உலகின் பல நாடுகளுக்கு சென்று மக்களுக்கு ஆன்மீக விளிப்புணர்வினை ஏற்படுத்தினார். சுவாமிகள் விட்டுச் சென்ற சேவகளை அவரது சீடரான மட்டக்களப்பு மகா யோகி ஆன்மீகக்குரு எஸ். புண்ணியரெத்தினம் சுவாமிகள் தொடர்ந்து செய்து வருகின்றார்கள்.

சமாதி

முருகேசு சுவாமிகள் கடந்த 2007ம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா சென்றார். அங்கு மருத்துவமனை ஒன்றில், செப்டம்பர் 24, 2007 அன்று சமாதியடைந்தார். நுவரெலியா ஸ்ரீ காயத்திரி பீட வளாகத்திலுள்ள தியான மண்டபத்தில் சுவாமிகளின் ஜீவசமாதி அமைய பெற்றுள்ளது. அங்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

நூல்கள்

தமிழில்:

  1. ஸ்ரீ காயத்ரி மந்திர மகிமை
  2. ஞான குரு
  3. மனித காந்தம்
  4. எளிய முறை யோகப் பயிற்சி
  5. சகல தெய்வ உபாசனா சித்தி
  6. காயத்ரி உபாசனா பத்ததி
  7. காயத்ரி ராமாயணம்
  8. காயத்ரி கீதை
  9. காயத்ரி மூலம் குண்டலினி விழிப்பு
  10. பிரபஞ்சம் இன்பமயம்
  11. மனித உடலில் தெய்வ ஞானம்

ஆங்கிலத்தில்:

  1. The Great Science and Power of Gayathri
  2. Spiritual Tenets of Sri Gayathri Peetam
  3. Cosmo Mystic Meditation


வெளி இணைப்புகள்

தளத்தில்
நூலகம்:எழுத்தாளர் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://tamilar.wiki/index.php?title=முருகேசு_சுவாமிகள்&oldid=27844" இருந்து மீள்விக்கப்பட்டது