முதுசொல்

முதுசொல் என்பதனைத் தொல்காப்பியம் முதுமொழி எனவும் குறிப்பிடுகிறது. இது செய்யுள் வகை ஏழனுள் ஒன்று. தொல்காப்பியர் காலத் தமிழ் பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்று செய்யுளானது ஏழு நிலைகளில் காணப்படுகிறது என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.[1] கருதிய ஒரு பொருளை முடித்துக் காட்டுவதறுகாகப் பாடலில் முதுமொழி இணைக்கப்படும். அது நுட்பம் உடையதாகவும் சுருக்கமாகவும், தெளிவானதாகவும், பொருட்செறிவு உடையதாகவும், மென்மையானதாகவும் இருக்கும்.[2]பழமொழி நானூறு நூலில் வரும் பாடல்களை முதுமொழி யாப்புக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்

மேற்கோள்

  1. பாட்டு, உரை, நூலே, வாய்மொழி, பிசியே,
    அங்கதம், முதுசொல், அவ் ஏழ் நிலத்தும்,
    வண் புகழ் மூவர் தண் பொழில் வரைப்பின்
    நாற் பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்
    யாப்பின் வழியது' என்மனார் புலவர். (தொல்காப்பியம், பொருளதிகாரம் 384 – செய்யுளியல்)

  2. 'நுண்மையும், சுருக்கமும், ஒளியுடைமையும்,
    எண்மையும், என்று இவை விளங்கத் தோன்றி,
    குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
    ஏது நுதலிய முதுமொழி' என்ப (தொல்காப்பியம், பொருளதிகாரம் 479 – செய்யுளியல்)

"https://tamilar.wiki/index.php?title=முதுசொல்&oldid=13317" இருந்து மீள்விக்கப்பட்டது