முதலிக் காமிண்டன்
முதலிக்காமிண்டன் என்பது பருத்திப்பள்ளி என்னும் ஊரில் வாழ்ந்த செல்லன் என்பானுக்குத் தரப்பட்ட ஒரு பாராட்டு விருது. இதனை வழங்கியவர் கிருஷ்ணதேவராயர். தாராபுரம் என்னும் தென்கரையூரில் நடைபெற்ற போரில் இந்தச் செல்லன் படை ஒன்றைத் திரட்டிக்கொண்டு வந்து பகைவரை வென்றான். இதனைப் பாராட்டிக் கிருட்டிணதேவராயர்
முதலிக் காமிண்டன் என்னும் விருதினைச் செல்லனுக்கு வழங்கினார். இந்தச் செய்தியைக் கொங்கு மண்டல சதகம் படல்களில் ஒன்று தெரிவிக்கிறது.[1]
- பாடல்
புதுமைப் படை வேட்டுவர் சூழத் தாராபுரத்துடனே
சதுரமிகு படையால் சமராற்றிச் சயம் பெறவே
முதலிக்காமிண்டன் எனக் கிருஷ்ணராயர் மொழி விருதை
மதிகொள் பருத்திப் பளிச் செல்லனும் கொங்கு மண்டலமே. 74
மேற்கோள்கள்
- ↑ கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம், பாடல் 74, நூல் வெளியீடு சாரதா பதிப்பகம், 2008, முனைவர் ந. ஆனந்தி தெளிவுரை பக்கம் 116-117