முடிகொண்டான் கோதண்டராமர் கோயில்
முடிகொண்டான் கோதண்டராமர் கோயில், தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராமர் கோயிலாகும். பஞ்சராமர் தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
கோதண்டராமர் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருவாரூர் |
அமைவு: | முடிகொண்டான், |
ஆள்கூறுகள்: | 10°54′9″N 79°38′35.8″E / 10.90250°N 79.643278°ECoordinates: 10°54′9″N 79°38′35.8″E / 10.90250°N 79.643278°E |
கோயில் தகவல்கள் | |
தீர்த்தம்: | இராம தீர்த்தம், கல்யாண புஷ்கரணி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டடக்கலை |
இணையதளம்: | mudikondan.org |
அமைவிடம்
இக்கோயில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில், மகுடவர்தனபுரம் எனும் முடிகொண்டானில் உள்ளது.[1]
மூலவர்
ராமரின் வருகையைப் பற்றி பரதரிடம் சொல்வதற்காக ஆஞ்சநேயர் சென்றுவிட்ட காரணத்தால் இங்கு மூலவராக ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோர் மட்டுமே உள்ளனர். ராமர் கோதண்டராமராக கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார். அவருக்கு வலப்புறம் சீதையும், இடப்புறம் லட்சுமணனும் உள்ளனர்.[1]
விழாக்கள்
புரட்டாசி சனிக்கிழமை, ராம நவமி போன்ற திருவிழாக்கள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.