முடத்தாமக் கண்ணியார்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
முடத்தாமக் கண்ணியார் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான பொருநராற்றுப்படையை இயற்றிய புலவரின் பெயராகும். இவர் ஆண்பால் புலவர் ஆவார். கண்ணி என்பது பூமாலை வகைகளில் ஒன்று. 'முடத்தாமம்' செண்டால் இணைக்கப்படாத மாலை. கழுத்தில் அணியும்போது இருபுறமும் தொங்கும். இதனை அணிந்தவர் முடத்தாமக் கண்ணியார். ஆயினும் முடம்பட்ட தாமக்கண்ணி என விளங்கிக்கொண்டு முடத்தாமக் கண்ணி என்னும் பெயர் உறுப்பால் வந்ததென்றும், இவர் பெண்பால் புலவர் என்றும் கூறுவர். பொருநராற்றுப்படை என்பது சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய ஒரு நூல் ஆகும். சோழன் கரிகாற் பெருவளத்தானை இவர் இந்தப் பாடலில் போற்றிப் பாடியுள்ளார். இந்த நூல் 248 அடிகளைக் கொண்டது. இதன் இறுதியில் பிற்காலத்தவர் எழுதிய இரண்டு வெண்பாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை இந்த நூலின் தொகுப்புச் செய்திபோல் உள்ளன.