முகம்மது சியாவுதீன்
முகம்மது சியாவுதீன் (Muhammad Ziauddin) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் ஆவார். பொருளாதார நிபுணர் மற்றும் வரலாற்றாசிரியராகவும் இவர் அறியப்படுகிறார்.[1]
இயற்பெயர் | முகம்மது சியாவுதீன் Muhammad Ziauddin محمد ضیاء الدین |
---|---|
பிறந்ததிகதி | 1938 |
பிறந்தஇடம் | சென்னை, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு |
இறப்பு | 29 நவம்பர் 2021 (அகவை 82–83) |
பணி | பத்திரிகையாளர், பொருளாதார நிபுணர் மற்றும் வரலாற்றாளர் |
தேசியம் | பாக்கித்தானியர் |
கல்வி நிலையம் | தாக்கா பல்கலைக்கழகம் கராச்சி பல்கலைக்கழகம் |
செயற்பட்ட ஆண்டுகள் | 1964–2021 |
செயற்பட்ட ஆண்டுகள் | 1964–2021 |
வாழ்க்கைக் குறிப்பு
1938 ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியாவில் இருந்த சென்னை நகரில் சியாவுதீன் பிறந்தார். [2] டாக்கா பல்கலைக்கழகத்தில் [3] மருந்தியலில் இளம் அறிவியல் பட்டமும், 1964 ஆம் ஆண்டு கராச்சி பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார் [1] . பாக்கித்தான் எகனாமிசுட்டு, மார்னிங் நியூசு, தி முசுலீம், டான், தி நியூசு இன்டர்நேசனல் மற்றும் தி எக்சுபிரசு திரிப்யூன் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றினார். " இவரது வாழ்க்கை அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஐந்து செய்தித்தாள்களில் பரவியது", என்று ஒரு முக்கிய பாக்கித்தானிய தொலைக்காட்சி செய்தி அலைவரிசை கூறியது.[3] [2] [4]
2002 [1] ஆம் ஆண்டு 2006 ஆம் ஆண்டு வரை தெற்காசிய சுதந்திர ஊடக சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.
பாக்கித்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, பாக்கித்தான் எதிர்கொள்ளும் பொருளாதார பிரச்சனைகள் குறித்து சியாவுதீனை அடிக்கடி அழைத்து ஆலோசனை கேட்பார் என்று கூறப்படுகிறது. [4]
இறப்பு மற்றும் மரபு
29 நவம்பர் 2021 அன்று இசுலாமாபாத்தில் உள்ள இல்லத்தில் முகம்மது சியாவுதீன் காலமானார். [5] [2]
அவரது சக பத்திரிகையாளர்களில் ஒருவரான கைசர் பட், சமச்சீர் மற்றும் புறநிலை நோக்கோடு கட்டுரைகளை எழுதுவார் என்று கூறி இவருக்கு அஞ்சலி செலுத்தினார். [4]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 "Veteran journalist Muhammad Ziauddin passes away at 83 in Islamabad after prolonged illness". 29 November 2021. https://www.dawn.com/news/1660918.
- ↑ 2.0 2.1 2.2 "Muhammad Ziauddin, interrogator of historymakers, chronicler of Pakistan's economy, dies". https://www.samaa.tv/news/2021/11/muhammad-ziauddin-interrogator-of-historymakers-chronicler-of-pakistans-economy-dies/."Muhammad Ziauddin, interrogator of historymakers, chronicler of Pakistan's economy, dies". Samaa TV News website.
- ↑ 3.0 3.1 "Senior journalist Muhammad Ziauddin passes away at 83". The Express Tribune (newspaper). 29 November 2021. https://tribune.com.pk/story/2331542/senior-journalist-muhammad-ziauddin-passes-away-at-83.
- ↑ 4.0 4.1 4.2 "Muhammad Ziauddin: The last of the Mohicans". The Express Tribune (newspaper). 29 November 2021. https://tribune.com.pk/story/2331613/muhammad-ziauddin-the-last-of-the-mohicans.
- ↑ "سینئر صحافی محمد ضیاء الدین انتقال کر گئے". https://urdu.geo.tv/latest/270785.