மீனாட்சியம்மாள் நடேசய்யர்
மீனாட்சியம்மாள் நடேசய்யர் மலையகத் தமிழ் கவிஞர், எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர்.[1] இவரின் பல கவிதைகள் மலையகத் தமிழர்களின் அரசியல், பொருளாதார, வாழ்வியல் சிக்கல்களை எடுத்துரைத்து, அவர்களை தமது உரிமைகளுக்காகப் போராடும்படி தூண்டி அமைந்துள்ளன. இவர் மலையகத்தின், ஈழத்தின் முதல் பெண் கவிஞர் என்றும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.[2] இவர் மலையக அரசியல்வாதியும், தமிழறிஞரும், பதிப்பாளருமான கோ. நடேசய்யரின் மனைவி ஆவார்.
மீனாட்சியம்மாள் நடேசய்யர்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
மீனாட்சியம்மாள் நடேசய்யர் |
---|---|
தேசியம் | மலையகத் தமிழர் |
அறியப்படுவது | கவிஞர், எழுத்தாளர், மனித உரிமை செயற்பாட்டாளர் |
துணைவர் | கோ. நடேசய்யர் |
இலங்கையில் பெண்களின் உரிமைகளுக்காக, குறிப்பாக வாக்குரிமைக்காக இவர் சிறப்பாக செயற்பட்டார்.
படைப்புகள்
- இந்தியத் தொழிலாளர் துயரச்சிந்து – இரண்டு பாகங்கள் - 1931 - சகோதரி அச்சகம், அட்டன்
- இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை - 1940 - கணேஸ் பிரஸ், அட்டன்
எடுத்துக்காட்டுக் கவிதைகள்
- 'பாய்க்கப்பல் ஏறியே வந்தோம்- அந்நாள்
- பலபேர்கள் உயிரினை யிடைவழி தந்தோம்
- தாய்நாடென் றெண்ணி யிருந்தோம்- இவர்கள்
- தகாத செய்கைக் கண்டு மனமிக நொந்தோம்’
மேற்கோள்கள்
- ↑ மறைக்கப்பட்ட ஆளுமைகள் – திருமதி மீனாட்சியம்மாள் நடேசய்யரை முன்னிறுத்தி..! : லெனின் மதிவானம்
- ↑ "வரலாறு, அரசியல், சமூக நிலை பாடி நிற்கும் மலையகத் தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள் ஓர் ஆய்வு". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-09-11.