மிளைவேள் தித்தன்
மிளைவேள் தித்தன் சங்ககாலப் புலவர்களில் ஒருவன். சங்கநூல் தொகுப்பில் இவனது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 284.
உறந்தை அரசன் தித்தன் வேறு. மிளைவேள் தித்தன் வேறு.
- மிளை = காவல்காடு
- வேள் = வேளிர்குடி வள்ளல்
பாடல் சொல்லும் செய்தி
திருமணம் நிகழவிருக்கிறது. தோழி தலைவியிடம் சொல்கிறாள்.
அவன் நாடன். நாடன் அறவன் ஆயினும் அறநெறி அல்லாதவன் ஆயினும் இருந்துவிட்டுப் போகட்டும். அவனது சிறுகுடி நம்மை ஏசுமோ? அல்லது நம்மை நினைக்காதோ?
- ஏசு = புகழ் (ஒப்புநோக்குக: 'கல்லேசு கவலை' - மலைபடுகடாம்)
அவன் நாடு
- போரிட்ட யானையின் புகர்முகம் போலப் பெரும் பாறாங்கற்களில் பலாப்பழமும், காந்தள் பூக்களும் வீழ்ந்துகிடக்கும் நாடு அவன் நாடு.
சிறுகுடி
- வரையில் அருவி கொட்டுவது போல சொற்களைக் கொட்டும் ஊர் அவன் சிறுகுடி.