மியா (நடிகை)

மியா என்றறியப்படும் மியா ஜார்ஜ் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.[1] தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் துணை நடிகையாக திரை வாழ்க்கையைத் தொடங்கினார். டாக்டர் லவ், ஈ அடுத்த காலத்து ஆகிய மலையாளத் திரைப்படங்களில் ஏற்ற சிறு வேடங்களின் மூலமாக திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். 2012 ஆவது ஆண்டில் சிறந்த கேரள அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் செட்டயீசு என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.[2] தமிழில் 2014 ஆவது ஆண்டில் வெளியான அமர காவியம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

மியா ஜார்ஜ்
Actress Miya George.jpg
பிறப்புகிமி ஜார்ஜ்
28 சனவரி 1992 (1992-01-28) (அகவை 32)
தானே, மும்பை, மகாராட்டிரம்,  இந்தியா
இருப்பிடம்பாலை, கோட்டயம், கேரளம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்அல்போன்சா கல்லூரி, பாலை
செயின்ட் தாமஸ் கல்லூரி, பாலை
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2010– நடப்பு
சமயம்கிறிஸ்தவம்

வாழ்க்கைக் குறிப்பு

நடித்த திரைப்படங்கள்

  • அமரகாவியம் - 2014
  • இன்று நேற்று நாளை - 2015
  • வெற்றிவேல் - 2016
  • ஒரு நாள் கூத்து - 2016
  • எமன் - 2017

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில்,
Miya George
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://tamilar.wiki/index.php?title=மியா_(நடிகை)&oldid=23188" இருந்து மீள்விக்கப்பட்டது