மின்னல் கொடி

மின்னல் கொடி என்பது 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. அமர்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ், எஸ். பாட்சா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மின்னல் கொடி
இயக்கம்கே. அமர்நாத்
தயாரிப்புராமானிக்லால்
மோகன் பிக்சர்ஸ்
மோகன்லால்
நடிப்புபி. எஸ். சீனிவாச ராவ்
எஸ். பாட்சா
எஸ். எஸ். கொக்கோ
கே. பி. ராவ்
கே. டி. ருக்மணி
சுப்புலட்சுமி
அலமு
உஷாராணி
வெளியீடுஅக்டோபர் 30, 1937
நீளம்14205 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

மோகினி என்ற இளம்பெண் மின்னல் கொடி எனும் புரட்சிக்காரன் சாகும் தருவாயில் தன் கடமைகளை நிறைவேற்றுமாறு கேட்க, முகமூடி ஆணுடை தரித்து தொடர்ந்து மின்னல் கொடியாகி எதிரிகளை அழிக்கிறாள். தீயவர் அழிந்து காதலர் இணைவதோடு படம் சுபமே முடிகிறது.

நடிகர்கள்

இப்படத்தில் சீனிவாசராவுடன் (போலீஸ் அதிகாரி), கே. டி. ருக்மணி (மின்னல் கொடி, மோகினி), பாட்சா (வில்லன்), கொக்கோ (காமெடி நண்பன்) ஆகியோர் நடித்தனர்.

உசாத்துணை

  1. (in தமிழ்) சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2018-02-09 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180209131112/http://www.lakshmansruthi.com/cineprofiles/1937-cinedetails27.asp. பார்த்த நாள்: 2016-11-22. 
"https://tamilar.wiki/index.php?title=மின்னல்_கொடி&oldid=36602" இருந்து மீள்விக்கப்பட்டது