மா. பா. குருசாமி


மா. பா. குருசாமி (பிறப்பு: ஜனவரி 15, 1936) புகைப்படத்திற்கு ,தகவல்களுக்கு நன்றி கீற்று என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். விருதுநகர் மாவட்டம், பாறைப்பட்டி எனும் ஊரில் பிறந்த இவர் தற்போது திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். இவர் 130க்கும் அதிகமான நூல்களை எழுதியிருக்கிறார். நல்லாசிரியர் விருது, குறள் படைப்புச் செம்மல், தமிழக அரசின் சிறப்பு முதல்வர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய “அக்கினிக் குஞ்சு” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாடகம் (உரைநடை, கவிதை ) வகைப்பாட்டிலும், "காந்தியப் பொருளியல்" எனும் நூல் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பொருளியல் வகைப்பாட்டிலும் பரிசு பெற்றிருக்கின்றன.

மா. பா. குருசாமி
மா. பா. குருசாமி
இயற்பெயர்/
அறியும் பெயர்
மா. பா. குருசாமி
பிறந்ததிகதி ஜனவரி 15, 1936
இறப்பு 25-12-2019
அறியப்படுவது எழுத்தாளர்

குறள் கதைகள் எனும் இவரின் நூலில் முப்பது திருக்குறள்களை வள்ளுவர் எந்த சூழலில் எழுதினார் என்பது வள்ளுவர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களாக இடம்பெற்றுள்ளன. வாழ்வியல் நிகழ்வுகளையே வள்ளுவர் குறளாகத் தந்தார் என்ற இவர் கூறுகின்றார்.

மதுரை காந்திய புத்தக மையத்தின் தலைவராக இருந்து வருபவர் மா.பா.குருசாமி. திண்டுக்கல் மாவட்டத்தின் இன்றைய அரிஜன சேவா சங்கத்தின் செயலாளரும் இவரே. அய்யா பாதமுத்து என்னும் தெளிந்த காந்தியச் சிந்தனையாளர், பேராசிரியர் மார்க்கண்டன், அருட்செல்வர் நா.மகாலிங்கம் இவர்களையெல்லாம் தனக்கு மிக நெருக்கமானவர் களாகப் பெற்றவர் இவர். நூற்றிஐம்பது நூல்களின் ஆசிரியர். எண்பது வயதிலும் நாற்பது வயதுக்குரிய சுறுசுறுப்பு, நினைவாற்றல் பெற்றவர்.

வகுப்பாசிரியர் வெங்கடராம அய்யர், வகுப்பறையில் சொன்ன ஏகலைவன் கதையிலிருந்து, இந்து மதத்தினுள்ளே சாதிய ஏற்றத்தாழ்வு இவ்வளவு பயங்கரமாக இருந்திருக்கிறதே என்பதை உணர்ந்தார். ஆயினும் அதைவிட்டு வெளியேறாமல், அதனுள்ளேயே தன் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடிப் போராடித் தன்னை விசாலப்படுத்திக் கொண்டார் இவர்.

டி.கல்லுப்பட்டி மகாவித்யாலயத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், பிராமணர்கள் வாழும் தெருவில் இவர் தன் குடும்பத்தோடு வசிக்க நேர்ந்தது. இவர் மனைவி தேமொழி அம்மையார் பிராமணர்கள் நீர் இறைக்கும் கிணற்றில் நீர் அள்ளப் போயிருக்கிறார். கிணறு தீட்டுப்படுகிறது, வராதே என்றார்கள் பிராமணப் பெண்கள். தீண்டாமை ஒரு குற்றம் என்பதை எடுத்துச் சொல்லி, நீங்கள் எது வேண்டு மானாலும் செய்யுங்கள், நான் நீர் இறைக்கத்தான் செய்வேன் என்று அவர்களுக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்து, வெற்றி பெற்றவர் மா.பா.குருசாமி.

ஆதாரம்

"https://tamilar.wiki/index.php?title=மா._பா._குருசாமி&oldid=5506" இருந்து மீள்விக்கப்பட்டது