மா. செ. மாயதேவன்


மா. செ. மாயதேவன் (பி: 1933) மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவார். முனியாண்டி, முனிதாசன், மாயன், மா. மரகதம் எனும் புனைப்பெயர்களால் அறியப்பட்ட இவர், அச்சக உரிமையாளராவார். மலேசியாவில் ஆரம்ப காலத்திலேயே புத்திலக்கியம் வளர்த்தவர்களுள் மா. செ. மா. முக்கியமானவராகக் கருதப்படுகின்றார். மேலும் "திருமுகம்" எனும் தலைப்பில் கையெழுத்து சஞ்சிகையொன்றையும் நடத்தியுள்ளார். தைப்பிங் தமிழர் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.

மா. செ. மாயதேவன்
மா. செ. மாயதேவன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
மா. செ. மாயதேவன்
பிறந்ததிகதி 1933
அறியப்படுவது எழுத்தாளர்

எழுத்துத் துறை ஈடுபாடு

1951 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், ஓரங்க நாடகங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

  • "இரத்த தானம்" (சிறுகதைத் தொகுப்பு - 1953)
  • "நீர்ச்சுழல்" (குறுநாவல் - 1958)

(இரண்டும் மா.இராமையாவுடன் கூட்டாக எழுதியவை)

  • "மலாயாவில் தமிழர் நாகரிகமும் கலையும்" (1958)
  • "இலக்கியத்தில் புதுமைப்பித்தன்" (கட்டுரைகள், 1961)
  • "சபலம்" (சிறுகதைகள்; தொகுப்பாசிரியர்; 1962)
  • "மலேசியாவில் தமிழர்கள்" (கட்டுரைகள், 1968)
  • "மன உணர்வுகள்" (கட்டுரைகள், 1972)
  • "இராமையாவின் இலக்கியப் பணி" (தொகுப்பாசிரியர், 1975)

இவர் பற்றிய நூல்

  • "மா. செ. மாயதேவன் இலக்கியப் பணி"

தொகுப்பாசிரியர்: இர. ந. வீரப்பன் 1969).

பரிசுகளும் விருதுகளும்

  • "தமிழ்ச் சீலர்" (1968)
  • "அருட்செல்வர்" (1980) - தைப்பிங் இந்து தேவாலய சபா
  • "தமிழ்க் காவலர்" (2000) - தைப்பிங் ஓம் ஸ்ரீ ஐயனார் கோயில்
  • அரசாங்க PJK விருது (1978)
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கப் பாராட்டு (1978)

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=மா._செ._மாயதேவன்&oldid=6372" இருந்து மீள்விக்கப்பட்டது