மா. சுப்பிரமணியம் (அரசியல்வாதி)
மா. சுப்ரமணியம் (M. Subramaniam) என்பவர் ஒரு தமிழக அரசியலரும், அமைச்சரும் ஆவார். திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சி உறுப்பினரான இவர் 2006-2011 காலகட்டத்தில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் மாநகர மேயராக இருந்தார். மீண்டும் திமுக வேட்பாளராக 2011 இல் மேயர் தேர்தலில் போட்டியிட்டார்[1], ஆனால் அதிமுகவின் சைதை சா. துரைசாமியிடம் தோல்வியடைந்தார். 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது சைதாபேட்டை தொகுதியில் போட்டியிட்டு சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கிண்டி தொழிற்குடியிருப்பில் வாழும் இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவர் 1999 இல் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.
மா. சுப்பிரமணியம் | |
---|---|
மா. சுப்பிரமணியம் | |
தமிழக அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 7 மே 2021 | |
அமைச்சர் | மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் |
முதல்மைச்சர் | மு. க. ஸ்டாலின் |
முன்னவர் | சி. விஜயபாஸ்கர் |
தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2016 | |
முன்னவர் | ஜி. செந்தமிழன் |
தொகுதி | சைதாப்பேட்டை |
சென்னை மாநகரத் தந்தை | |
பதவியில் 2006 - 2011 | |
முன்னவர் | மு. க. ஸ்டாலின் |
பின்வந்தவர் | சைதை சா. துரைசாமி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 1 சூன் 1959 வாணியம்பாடி, தமிழ்நாடு |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
வாழ்க்கை துணைவர்(கள்) | காஞ்சனா |
பிள்ளைகள் | மரு. இளஞ்செழியன் அன்பழகன் |
முன்வாழ்க்கை
மா. சுப்பிரமணியம் அப்போதைய வட ஆற்காடு மாவட்டம், வாணியம்பாடிக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூரில் பிறந்தார். பின்னர் இவரது குடும்பமானது சித்தூர் அருகில் உள்ள புல்லூர் கிராமத்தில் குடியேறியது. இவர் அங்கேயே தன் துவக்கக் கல்வியை பயின்றார். பின்னர் குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்தது.
கல்வி
சுப்பிரமணியன், சைதாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தனது உயர் கல்வியை நிறைவு செய்தார். பின்னர் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பையும் பெங்களூர் ஹவ்னூர் சட்டக்கல்லூரியில் தனது சட்டப்படிப்பையும் (எல்.எல்.பி) முடித்தார்.
பணி
இவருக்கு உடற்பயிற்சி நிலையத்தில் உடற்பயிற்சிசெய்தல், திரைப்படங்கள், யோகா போன்றவற்றில் ஆர்வம் உண்டு. இவர் ஒரு மாரத்தான் வீரரும் கூட தனது முதல் மாரத்தானை 2014 ஆம் ஆண்டு புதுச்சேரி ஆரோவிலில் நடந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டவர், இதுவரை 100 மாரத்தான் போட்டிகளைக் கடந்துள்ளார்.[2]
அரசியல் வாழ்க்கை
இவர் 1976 ஆம் ஆண்டு திமுகவில் சேர்ந்தார். 1996-2006 காலகட்டத்தில் சென்னை மாநகராட்சி அவைத்தலைவராக இருந்தார். திமுக இளைஞர் அணியின் துணை பொதுச் செயலாளராக இருக்கும் இவர் ஸ்டாலினின் ஒரு தீவிர ஆதரவாளர். இவர் 2006-2011 காலகட்டத்தில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் மாநகர மேயராக இருந்தார். மீண்டும் திமுக வேட்பாளராக 2011 இல் மேயர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அதிமுகவின் சைதை சா. துரைசாமியிடம் தோல்வியடைந்தார். 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது சைதாபேட்டை தொகுதியில் போட்டியிட்டு சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சைதாபேட்டை சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு (மக்கள் நல்வாழ்வு, மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலன்) அமைச்சசராக பதவியேற்றார்.[3]
மேற்கோள்கள்
- ↑ "மா. சுப்ரமணியம் மேயர் திமுக வேட்பாளராக அறிவிப்பு" இம் மூலத்தில் இருந்து 2012-10-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121023073525/http://www.hindu.com/2007/02/26/stories/2007022615120300.htm.
- ↑ செ.ஞானபிரகாஷ் (17 பெப்ரவரி 2017). "வின்னர்ஸ்... இந்த ‘ரன்’னர்ஸ்!". கட்டுரை (தி இந்து). http://tamil.thehindu.com/society/lifestyle/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/article9547064.ece. பார்த்த நாள்: 18 பெப்ரவரி 2017.
- ↑ தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், பிபிசி 2021 மே 6