மாளவிகா வேல்ஸ்
மாளவிகா வேல்ஸ் (Malavika Wales) ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர், பாரம்பரிய நடனக் கலைஞராகவும் உள்ளார். [1] திருச்சூரைச் சேர்ந்த ஒரு மலையாள குடும்பத்தில் இருந்து வந்தவரான இவர், மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் என்கிற திரைப்படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். [2] [3] இவர், மழவில் மனோரமா என்ற தொலைக்காட்சி நிறுவனம் தயாரித்த 'பொன்னம்பிலி' தொலைக்காட்சித் தொடரில் 'பொன்னு' கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் பெரும் புகழை அடைந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
மாளவிகா, திருச்சூரில் வசிக்கும் பி.ஜி. வேல்ஸ் மற்றும் சுதினா வேல்ஸ் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார் . இவருக்கு மிதுன் வேல்ஸ் என்கிற மூத்த சகோதரர் உள்ளார். திருச்சூர் ஹரி ஸ்ரீ வித்யா நிதி பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார், பின்னர் மும்பையில் உள்ள நடிகர் 'அனுபம் கெரின்' நடிகர் தயாரிப்பு நிறுவனத்திற்குச் சென்றார், நடிப்புத் துறையில் பட்டயப் படிப்பு பயின்றார். [2] தற்போது, இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பயின்று வருகிறார். [1]
மாலவிகா, தனக்கு 6 வயதாக இருந்தபோது நடனத்தைக் கற்கத் தொடங்கினார், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணா கோவிலில் தனது நடன அரங்கேற்றத்தைச் செய்தார். [4] கலாமண்டலம் ஹேமாவதி மற்றும் கலாமண்டலம் பிரசன்னா உன்னி போன்ற நடனக் கலைஞர்களின் கீழ் இவர் நடனத்தைக் கற்றுக்கொண்டார். இவர் பரதநாட்டியம், மோகினியாட்டம் மற்றும் குச்சிபுடி போன்ற நடனங்களில் பயிற்சி பெற்றவராக உள்ளார். [1]
தொழில்
இவர், 2009 ல் நடைபெற்ற 'மிஸ் கேரளா' எனப்படும் அழகிப் போட்டியில் பங்கேற்றார். தனது, 16வது வயதில், அந்த ஆண்டின் இளைய போட்டியாளராக இருந்தார். அந்தப் போட்டியில், இவர் மூன்றாவது சுற்று வரை தேர்வு செய்யப்பட்டார். மேலும், அப்போட்டியில் 'அழகான கண்களை உடையவர்' எனப் பொருள்படும் 'மிஸ் பியூட்டிஃபுல் ஐஸ்' என்ற பட்டத்தைப் பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டார். [1] பின்னர், வினீத் ஸ்ரீனிவாசன் இவரது புகைப்படங்களைப் பார்த்து, மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் திரைப்படத்தின் ஒரு கதாபாத்திரத்திற்காக இவரைத் தேர்வு செய்தார்.
மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் அவரது முதல் வெளியீடாக இருந்தாலும், இதற்கு முன்பு லெனின் ராஜேந்திரனின் மகரமஞ்சுவில் நடித்திருந்தார். இவர் ஆறாம் வகுப்பில் படிக்கும் போது, லெனின் ராஜேந்திரனின் ஆயிஷா என்ற ஆவணப்படத்திலும் நடித்தார். [1] இவர், திலக்கம் என்கிற மலையாள வெற்றி படத்தின், கன்னட மறுதயாரிப்பான நந்தீசாவில் நடித்தார். அதில், மலையாளத்தில் காவ்யா மாதவன் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். [5] பின்னர் இவர் மை ஃபேன் ராமு மற்றும் ஆர்ட் ஹவுஸ் படமான ஆட்டகதாவில் காணப்பட்டார், அதில் இவர் நடிகர் வினீத் ஏற்று நடித்த கதகளி கலைஞரின் ஆங்கிலோ-இந்திய மகளாக நடித்தார்.
மாளவிகா தமிழில் அறிமுகமான என்ன சத்தம் இந்த நேரம், திரைப்படத்தில், இவர் காது கேளாத மாணவர்களின் ஆசிரியராகக் காணப்பட்டார். [6] இவர் தனது முதல் தெலுங்கு படத்தில் கையெழுத்திட்டுள்ளார் – விஷ்ணு மற்றும் பரமேஷ்வர் நடித்த ஸ்ரீனிவாஸ் இயக்கிய முக்கோண காதல் கதை திரை, வெளியீட்டைக் காணத் தவறிவிட்டது. [5] இவர் இரண்டு தமிழ் படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் அழகுசெல்வத்தின் அழகுமகன் திரைப்படம் காலவரையின்றி 6 வருடங்களுக்கு தாமதப்பட்டது மற்றும் 2018 இல் வெளியானது. இது இவரின் தமிழ் பட அறிமுகமாக இருந்தது, மற்றும் இவர் நடித்த 'அறுசுவை அரசன்' திரைப்படம் தோல்வியடைந்தது. [4]
தொலைக்காட்சி அறிமுகமும் வெற்றியும்
2015 ஆம் ஆண்டில், மாளவிகா மழவில் மனோரமா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பொன்னம்பலி தொலைக்காட்சி தொடர் மூலம் மலையாளம் சின்னத்திரையில் அறிமுகமானார். இது, மலையாள குடும்பங்களின் மத்தியில் இவருக்கு ஒரு பொதுவான பெயரைப் பெற்றுத் தந்தது.
இப்போது, தென்னிந்திய பன்மொழி தொடரான நந்தினியில், ராகுல் ரவியின் ஜானகி (ஆவி) ஜோடி இரண்டாவது முறையாக சன் டிவி, சூர்யா டிவி, ஜெமினி டிவி மற்றும் உதயா டிவியில் ஒளிபரப்பாகிறது. வினயா பிரசாத் உடன் அம்முவின்தே அம்மாவிலும் அனுபமாவாக நடித்தார். இவர் தென்னிந்திய தொலைக்காட்சி துறையில் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார்.
விருதுகள்
- 2016 – மணப்புறம் – மின்னலே டிவி விருதுகள் சிறந்த தொலைக்காட்சி நடிகர் (பெண்) 2016 (பொன்னம்பிலிக்கு) [7]
- 2018 : கொச்சி டைம்ஸ் : தொலைக்காட்சி # 1 இல் மிகவும் விரும்பத்தக்க பெண்கள்
- 2020 : கொச்சி டைம்ஸ் : தொலைக்காட்சி # 1 இல் மிகவும் விரும்பத்தக்க பெண்கள்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Nayar, Parvathy S (2011-06-11). "Malavika Wales and her love for dance". The New Indian Express. http://newindianexpress.com/entertainment/malayalam/article434610.ece.
- ↑ 2.0 2.1 "Malavika Wales: God save you from Rajasenan’s ire!". Times of India இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103131623/http://articles.timesofindia.indiatimes.com/2011-10-11/news-interviews/30266502_1_martial-arts-second-film-dancer.
- ↑ "Malavika Wales and her love for dance". Express Buzz இம் மூலத்தில் இருந்து 2015-11-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151117014430/http://expressbuzz.com/topic/malavika-wales-and-her-love-for-dance/283406.html.
- ↑ 4.0 4.1 "Kerala / Thrissur News : Actor to present Bharathanatyam". The Hindu. 2011-02-28 இம் மூலத்தில் இருந்து 2011-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110305053021/http://www.hindu.com/2011/02/28/stories/2011022852320200.htm.
- ↑ 5.0 5.1 Parvathy S Nayar, TNN (2012-07-18). "Malavika reprises Kavya's role in her next! - Times Of India". Articles.timesofindia.indiatimes.com இம் மூலத்தில் இருந்து 2013-06-16 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130616045807/http://articles.timesofindia.indiatimes.com/2012-07-18/news-and-interviews/32715368_1_mollywood-art-house-flick-reprises.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2014-07-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140714194925/http://archives.deccanchronicle.com/130923/entertainment-kollywood/article/%E2%80%98k%E2%80%99wood-more-comfortable%E2%80%99-malavika-wales.
- ↑ http://www.newindianexpress.com/cities/kochi/Manappuram-Minnale-awards-announced/2016/06/05/article3466793.ece