மாலினி பார்த்தசாரதி

மாலினி பார்த்தசாரதி இந்தியாவின் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டவரும், பாரம்பரிய இந்து குழும இதழ்களின் நிறுவன குடும்பத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரும் ஆவார், மாலினி பார்த்தசாரதி தி இந்து குரூப் ஆஃப் பப்ளிகேஷன்ஸ் (பிரைவேட் லிமிடெட்) தலைவராக உள்ளார். தி இந்துவின் (2013-16) முன்னாள் தலைமை ஆசிரியரும் ஆவார் . [1] முன்னதாக 1996 முதல் 2004 வரை அந்த பத்திரிக்கையின் நிர்வாக ஆசிரியராக இருந்தார்

இயற்பெயர்/
அறியும் பெயர்
மாலினி பார்த்தசாரதி
பணி தலைமையதிகாரி, டி ஹெச் ஜி தனியார் வெளியீட்டு நிறுவனம்
கல்வி கொலம்பியா பல்கலைக்கழக இதழியல் பட்டதாரி பள்ளி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்

குடும்பம்

மாலினி பார்த்தசாரதி, கஸ்தூரி சீனிவாசனின் பேத்தியும், சீனிவாசன் பார்த்தசாரதியின் மகளுமாவார். தி இந்து பத்திரிகையை ஆரம்பித்தவரும், சிறந்த தேசபக்தருமான எஸ். கஸ்தூரி ரங்க ஐயங்காரின் கொள்ளுப் பேத்தியும் ஆவார்.[சான்று தேவை]

கல்வி

சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலை பட்டம் பெற்ற மாலினி பார்த்தசாரதி, அதைத்தொடர்ந்து கொலம்பியா பல்கலைக்கழக கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசத்தில்   பத்திரிகையியல் பிரிவில் முதுகலை  பட்டமும் பெற்றுள்ளார். 2008 ம் ஆண்டில் புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வு மையத்தில் இருந்து முனைவர் பட்டம் முடித்துள்ளார்

தொழில்

1983 இல் தி இந்து பத்திரிகையில்  சேருவதற்கு முன்பாக சிறிது காலம் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் பத்திரிகையாளராக பணிபுரிந்துள்ள, மாலினி, மூன்று தசாப்தங்களாக அரசியல் பத்திரிகையாளராக இருந்து, இந்திய அரசியலில் முக்கிய கருப்பொருள்கள் மற்றும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் குறித்து பல்வேறு குறிப்பிடத்தகுந்த அறிக்கைகள் மற்றும் தலையங்கங்கள் எழுதியுள்ளார். இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை மற்றும் பாகிஸ்தானுடனான உறவுகளில் முக்கிய கவனம் செலுத்தியுள்ளார்.

20 ஜூன் 2011 வரை தி இந்து செய்தித்தாளின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றிய பின்னர் 21 அக்டோபர் 2013 அன்று பத்திரிகையின் தலைமை ஆசிரியரானார். ஜனவரி 2013 ம் ஆண்டில், அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான இந்து மையத்தையும் நிறுவினார், இது தேசிய அரங்கில் கவலைக்குரிய முக்கியமான பொதுக் கொள்கை மற்றும் நிறுவனப் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்துவதையும்  அதனை ஆய்வு செய்யவதையும் முக்கிய  நோக்கமாக கொண்டுள்ளது. [2] [3]


ஜூலை 15, 2020 அன்று தி இந்து குழுமங்களின்  இயக்குநர்கள் குழுவின் தலைவராக மாலினி பார்த்தசாரதி நியமிக்கப்பட்டார். 75 வயதை எட்டியதால் தலைவர் பதவியில் இருந்து விலகிய என். ராமுக்குப் பிறகு அவர் பதவியேற்றார் .[4]

இதழியல் துறையில் சிறந்து விளங்கியதற்காக

  • பேங்க் ஆஃப் இந்தியா விருது (1997)  மற்றும்
  • உதய்பூர் மகாராணா மேவார் அறக்கட்டளையின் ஹல்திகாதி விருது என்ற இரண்டு விருதுகளை வென்றுள்ளார், அத்தோடு அவர் பயின்ற கொலம்பியா ஜர்னலிசம் பள்ளியின் முன்னாள் மாணவர் விருது - 2022  பெற்றவர்களில் ஐவரும் ஒருவராவார்.

அவர் தி இந்து செய்தித்தாளின் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில், 28 நவம்பர் 2015 அன்று தி இந்துவின் மும்பை பதிப்பைத் தொடங்கினார். மேலும்  இணைய அடிப்படையிலான பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு நாடு முழுவதும் வாசகர்களின் எண்ணிக்கையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. 2004 முதல், அவர் ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக உள்ளார்.[சான்று தேவை]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=மாலினி_பார்த்தசாரதி&oldid=27539" இருந்து மீள்விக்கப்பட்டது