மாலினி சாத்தப்பன்

மாலினி சாத்தப்பன் (English: Malini Sathappan, பிறப்பு: நவம்பர் 14, 1996) தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் நடித்துள்ள தமிழ் துணை நடிகை ஆவார். இலங்கை உள்நாட்டு போர் தொடர்பான கதை தளத்தை அடிப்படையாக கொண்டு 2013 ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த மெட்ராஸ் கஃபே திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் மாலினி. 2013 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு தடைசெய்யப்பட்ட இனம் (சிலோன்) படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானார் மாலினி. 2020 வரை சுமார் 11 படங்களில் இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.[1][2]

மாலினி சாத்தப்பன்
பிறப்பு14 நவம்பர் 1996 (அகவை 27–28)
தஞ்சாவூர், தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
கல்விஇளங்கலை மருத்துவம் மற்றும் இளங்கலை அறுவையியல், கிங்ஸ் கல்லூரி, இலண்டன்
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1996 - தற்போது வரை
பெற்றோர்சாத்தப்பன் நாகசாமி
சீதாலெட்சுமி

பிறப்பு

தமிழ்நாட்டின் கும்பகோணம் நகரத்தை பூர்விகமாக கொண்டவர். தஞ்சாவூரில் 14 நவம்பர் 1996 ஆம் தேதி பிறந்த இவரது தந்தை சாத்தப்பன் இந்திய இராணுவத்திலும், தாயார் சீதாலெட்சுமி கனடாவிலும் மருத்துவ பணியில் இருக்கின்றனர்.[3]

திரையுலக பயணம்

மாலினி சாத்தப்பன் தனது பள்ளிபடிப்பை தஞ்சாவூர் மற்றும் சென்னையிலும், சில காலம் ராஜஸ்தான் மாநிலத்தில் உயர்கல்வி படிப்பையும் படித்தார். இதன் பின்னர் இங்கிலாந்து தலைநகர் இலண்டனில் உள்ள பிரபல கிங்ஸ் மருத்துவக்கல்லூரியில் இளங்கலை மருத்துவ பட்ட படிப்பில் சேர்ந்தார். நடிப்பின் மீதும், மருத்துவ துறையின் மீதும் கொண்ட ஆர்வத்தால் சில காலம் படித்துக்கொண்டே படத்திலும் துணை வேடங்களில் நடித்தார். 2016 ஆம் ஆண்டு முதல் விடாயுதம், 6 அத்யாயம், அடடே, ஆதித்யவர்மா, பாரிஸ் பாரிஸ், சூரரை போற்று, பப்பரப்பாம் உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார் மாலினி சாத்தப்பன். மேலும் படப்பிடிப்பில் உள்ள பன்னிக்குட்டி, 1818 ஆகிய படங்களிலும் துணை நடிகையாக நடித்துவருகிறார் மாலினி சாத்தப்பன். நடிப்பு மட்டுமின்றி வடிவழகு மற்றும் எழுதுவதிலும் ஆர்வம் காட்டிவருகிறார் மாலினி.

திரைப்பட வரலாறு

வருடம் திரைப்படம் கதாபாத்திரம் [4][5]
2013 மெட்ராஸ் கஃபே குழந்தை நட்சத்திரம் - அறிமுகம்
2013 இனம் குயில்
2016 சவாரி துணைக் கதாபாத்திரம்
2016 விடாயுதம் அபர்ணா - துணைக் கதாபாத்திரம்
2018 6 அத்தியாயம் திவ்யாவின் தோழி
2019 அடடே துணைக் கதாபாத்திரம்
2019 ஆதித்ய வர்மா மீராவின் தோழி
2019 பாரிஸ் பாரிஸ் துணைக் கதாபாத்திரம்
2020 சூரரைப்போற்று துணைக் கதாபாத்திரம்
2020 பப்பரப்பம் துணைக் கதாபாத்திரம்
2020 பன்னிக்குட்டி துணைக் கதாபாத்திரம்
2020 1818 துணைக் கதாபாத்திரம்

விருதுகள்

  • 2018 - டொரோண்டோ சர்வதேச தமிழ்சங்கத்தின் “மயில்” விருது
  • 2014 - ஸ்ரீலங்கா மிர்ச்சியின் சிறந்த துணை நடிகை விருது.

மேற்கோள்களும் குறிப்புக்களும்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மாலினி_சாத்தப்பன்&oldid=23176" இருந்து மீள்விக்கப்பட்டது