மார்த்தா ஆன் செல்பி
மார்த்தா ஆன் செல்பி (Martha Ann Selby) என்பவர் இந்தியவியலிலும் தமிழிலும் ஆய்வு செய்யும் ஒர் அமெரிக்கப் பேராசிரியர் ஆவார். அமெரிக்காவில் ஆசுட்டின் நகரில் உள்ள தெக்குசாசு பல்கலைக்கழகத்தில் ஆசியவியல் துறையில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றினார். இவர் தெக்குசாசு பல்கலைக்கழகத்தில் இருபது ஆண்டுகளாக இருந்திருக்கின்றார். அமெரிக்காவில் உள்ள ஆர்வேடு பல்கலைக்கழகத்தில் நிறுவப்பெற்றுள்ள சங்கம் தமிழிருக்கைப் பேராசிரியர் பதவியில் முதன் முதலாக அமர்பவராகத் தேர்வு செய்யப்பெற்றுள்ளார்.
கல்வி
மார்த்தா செல்பி பழந்தமிழ், பிராகிருதம், சமற்கிருதம் ஆகிய மொழி இலக்கியங்களில் ஆய்வு செய்துள்ளார். சமற்கிருத மருத்துவ இலக்கியத்திலும், தற்காலத் தமிழ்ப் புதினங்களிலும் ஆய்வு ஆர்வம் கொண்டுள்ளார். தமிழ் சங்கப்பாடல்களில் அகத்துறையைச் சேர்ந்த ஐநூறு பாடல்களை மொழிபெயர்த்துள்ளார். திலீப்குமார் கதைகளை மொழிபெயர்த்துள்ளார்.
முனைவர் பட்ட ஆய்வுரை
- Toward a Grammar of Love: A Comparative Study of Interpretive Modes in Classical Indian Poetry. Ph.D (August 1994), The University of Chicago, Department of South Asian Languages and Civilizations. Dissertation.
படைப்புகள்
நூல்கள்
- Tamil Love Poetry: The Five Hundred Short Poems of the Aiilkurunuru. New York: Columbia University Press, 2011, 200 pp.
- A Circle a/Six Seasons: A Selection Ji-om Old Tamil, Prakrit and Sanskrit Verse. New Delhi: Penguin Books, 2003, 163 pp.
- Grow Long, Blessed Night: Love Poems ji·om Classical India. New York: Oxford University Press, 2000, 265 pp.
- Cat in the Agraharam and Other Stories (Evanston: Northwestern University Press, 2020)
தொகுப்பு நூல்
- Tamil Geographies: Cultural Constructions a/Space and Place in South India. Albany, N.Y.: SUNY Press, 2008 (co-edited with Indira Viswanathan Peterson), 326 pp.
நூல்களுள் படலங்கள்
- "Representations of the Foreign in Classical Tmnil Literature." In Ancient India in its Wider World, Carla Sinopoli and Grant Parker, editors. Ann Arbor: Centers for South and Southeast Asian Studies, The University of Michigan, 2008, pp. 79-90.
- "The Poetics of Anesthesia: Representations of Pain in the Literatures of Classical India." In Pain and its Transformations, Sarah Coakely and Kay Shelamay, editors. Cambridge, Massachusetts: Harvard University Press, 2007, pp. 317-330.
- "Sanskrit Gynecologies in Postmodernity: The Commoditization of Indian Medicine in Altet11ative Medical and New Age Discourses on Women's Health." In Asian Medicine and Globalization, Joseph S. Alter, editor. Philadelphia: University of Pennsylvania Press, 2005, pp. 120-131.