மார்க்கண்டேயனார் காஞ்சி
மார்க்கண்டேயனார் காஞ்சி என்பது பழமையான நூல்களில் ஒன்று. இளம்பூரணர் இந்த நூலின் பாடல்-பகுதி ஒன்றைக் குறிப்பிடுகிறார்.[1]
- பாடல்
- பாயிரும் பரப்பகம் புதையப் பாம்பின
- ஆயிரம் மணிவிக்கு அழலும் சேக்கைத்
- துளிதரு வெள்ளத் துயில்புடை பெயர்க்கும்
- ஒளியோன் காஞ்சி எளிது எனக் கூறின்
- இம்மை இல்லை மறுமை இல்லை
- நன்மை இல்லை தீமை இல்லை
- செய்வோர் இல்லை செய்பொருள் இல்லை
- அறிவோர் யார்இஃது இறுவழி இறுகென ...
- இந்தப் பாடல் நிலையாமை பொருள்மேல் காஞ்சி.
- தோல் என்னும் வனப்புநூலுக்கு இது எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளது.
அடிக்குறிப்பு
- ↑ தொல்காப்பியம், செய்யுளியல், நூற்பா 230 உரை.