மாய மாயவன்

மாய மாயவன் (Maya Mayavan) என்பது 1938 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் அதிரடித் திரைப்படமாகும். பி. சம்பத் குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம் தயாரித்தார். இதுவே தமிழின் முதல் அதிரடித் திரைப்படமாகும்.[2] இப்படத்தில் டி. கே. சம்பங்கி, ஜி. ஆர். வரதாச்சாரி, ஜே. சுசீலாதேவி, கே. கோகிலா ஆகியோர் நடித்தனர். இது 22 அக்டோபர் 1938 இல் வெளியானது.

மாய மாயவன்
இயக்கம்பி. சம்பத் குமார்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
இசைஜி. ராஜகோபால் நாயுடு
எஸ். வேலுச்சாமி
நடிப்புடி. கே. சம்பங்கி
ஜி. ஆர். வரதாச்சாரி
கே. காவேரி செட்டியார்
வேணுகோபால சர்மா
கோகிலா
ஜே. சுசீலா தேவி
எம். சீதா பாய்
வெளியீடுஅக்டோபர் 22, 1938
நீளம்15500 அடி[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

சபாபதி முதலியார் என்பவர் ஒரு பசுதோல் போர்த்திய புலி. அவர் நடன மங்கையான சுந்தரி (சுசீலா தேவி) இருக்கும்போது, இன்னொரு இளம் பெண்ணான இந்திரா (கே. கோகிலா) மீது ஆசைப்படுகிறார். எப்படியாவது அவளைத் தனக்குச் சொந்தமாக்க முயற்சிக்கிறார். துப்பறிவாளரான ஜெகதீஷ் (சம்பங்கி) இந்திராவை காப்பாற்ற முடிவு செய்கிறார். இந்நிலையில் அவர்களுக்கு இடையில் காதல் உருவாகிறது. அவர்களின் காதலுக்கு சபாபதி மற்றும் அவரது கூட்டாளிகளால் பல தடைகள் உருவகின்றன. ஆனால் தனது புலனாய்வாளர் திறன்களைப் பயன்படுத்தி, அந்த இணையர் எப்படி ஒன்று சேருகின்றனர் என்பதே கதையாகும்.[3][4]

நடிப்பு

திரைப்படத்தின் பாடல் புத்தகத்திலில் உள்ள தகவல்களைக் கொண்டு நடிகர்கள்:[4]

  • ஜெகதீசாக டி. கே. சம்பங்கி (துப்பறியும் அதிகாரி)
  • இந்திராவாக கே.கோகிலா
  • சுந்தரியாக ஜே. சுசீலா தேவி
  • பெண் நடனக் கலைஞராக சீதா பாய் சாந்தா
  • சர் சபாபதி முதலியாராக ஜி. ஆர். வரதாச்சாரி
  • திவான் பகதூர் சிவசங்கர முதலியாராக கே. காவேரி செட்டியார்
  • கிட்டுவாக வேணுகோபால சர்மா
  • பட்டுவாக வேணு செட்டி
  • முனுசாமியாக தேவராஜு
  • நெலியனாக வி. வி. எஸ். மணி

கொள்ளைக் கூட்டத்தினர்
  • அந்தோணிசாமி
  • தெய்வதனவேல்
  • சோமசுந்தரன்
  • லட்சுமிநாராயணன்
  • அப்பாவு பிள்ளை

தயாரிப்பு

மாய மாயவன் படத்தை டி. ஆர். சுந்தரம் தனது மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக தயாரித்தார். இதை பி. சம்பத்குமார் இயக்கினார். இப்படத்தின் கதை, பாடல் போன்றவற்றை எஸ். வேலுச்சாமி கவி எழுதினார்.[3] படத்தின் நீளம் 15500 அடி ஆகும்.[5]

இசை

இப்படத்திற்கு ஜி. ராஜகோபால் நாயுடு இசையமைத்தார். எஸ். வேலுச்சாமி கவி பாடல் வரிகளை எழுதியுள்ளார். பாடல்களை கே. கோகிலா, ஜே. சுசீலா தேவி, வேணுகோபால சர்மா, வேணு செட்டி, டி. கே. சம்பங்கி. ஆகியோர் பாடினர். மேலும் "தென்னிந்தியாவின் சைகல்" என்று அழைக்கப்பட்ட பி. ஜி. வெங்கடேசன் இரண்டு பாடல்களுக்கு பின்னணிப் பாடகராகப் பணியாற்றினார்.[3][4][5]

இசைக்குழு[4]
  • ராஜகோபால் நாயுடு - பிடில்
  • இப்ராஹிம் - ஆர்கன் மற்றும் பியானோ

கே. ரங்கய்யா நாயுடு - கிளாரினெட் டி. பி. சின்னையா - தபேலா

எண். பாடல் பாடகர்/கள்
1 தியாகபுவனி பாரத தேவி பி.ஜி.வெங்கடேசன்
2 மாலைநேரம் மனோகரந்தருமாம் காலம் கே. கோகிலா
3 லோக நாயக மதிய காந்தி கே. கோகிலா
4 மாநிலமீதே ஜனன ஜே. சுசீலா தேவி
5 ஊர்கள் தேடும் சொத்து எல்லாமே நாமக்கு
(சிங்க நடனம்)
குழுவினர்
6 காமவதனா ராதை சுகுணா ஜே. சுசீலா தேவி
7 குலவி கூடி டி. கே. சம்பங்கி, கே. கோகிலா
8 வாழ்விது தானே ஊழ்வினை பி. ஜி. வெங்கடேசன்
9 அலங்காரகண்ணே கைச்சரசி...நீ-லட்டு பூரி வேணுகோபால சர்மா, வேணு செட்டி
10 இக லோக வாழ்விலே ஜே. சுசீலா தேவி

வெளியீடும் வரவேற்பும்

மாயா மாயவன் 22 அக்டோபர் 1938 அன்று வெளியானது.[3] திரைப்பட வரலாற்றாசிரியர் ராண்டார் கையின் கூற்றுப்படி, படம் "பார்வையாளர்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை", ஆனால் "சுவாரஸ்யமான கதைக்களம், யாருமற்ற நெடுஞ்சாலைகளில் பரபரப்பான கார் துரத்தல்கள், கடத்தல்கள், பரபரப்பான காட்சிகள், அந்தக் காலத்து தமிழ் திரைப்படத் துறையில் அரிதாகவே காணப்பட்டன" என்று அவர் கூறினார்.[3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=மாய_மாயவன்&oldid=36496" இருந்து மீள்விக்கப்பட்டது