மாயா தர்பன்

மாயா தர்பன் (Maya Darpan, பொருள். மாயையான கண்ணாடி) என்பது குமார் சகானி இயக்கி 1972 ஆண்டு வெளியான இந்திய இந்தித் திரைப்படமாகும். இது 1950 களில் திரைப்பட படைப்பாளிகளான சத்யஜித் ராய், மிருணாள் சென், ரித்விக் கட்டக் ஆகியோர் முன்னெடுத்த இந்திய மாற்றுத் திரைப்பட இயக்கத்தின் குறிப்பிடத்தக்க படைப்பாகும். இப்படம் படம் வெளியான உடனேயே காணாமல் போனது. ஆனால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது, இன்று இந்தியத் திரைப்படங்களில் ஒரு முக்கிய படைப்பாக கருதப்படுகிறது. இப்படத்தில் அதிதி, அனில் பாண்டியா ஆகியோர் நடித்திருந்தனர்.

மாயா தர்பன்
திரைப்பட சுவரிதழ்
இயக்கம்குமார் சகானி
தயாரிப்புஇந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம்
கதை
இசைபாஸ்கர் சந்தவர்கர்
நடிப்பு
  • அதிதி
  • அனில் பாண்டியா
  • காந்தா வியாஸ்
  • இக்பால்நாத் கவுல்
ஒளிப்பதிவுகே. கே. மகாஜன்
படத்தொகுப்புமது சின்ஹா
வெளியீடு1972 (1972)
ஓட்டம்107 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி

சுருக்கம்

1947 ஆம் ஆண்டில் நாடு விடுதலைப் பெற்றதைத் தொடர்ந்து, இந்தியா ஒரு அரசியல் நிறுவனமாக இன்னும் முழுமையாக ஒருங்கிணைக்கப்படாத நிலையில், நேருவியன் சோசலிசம் அப்போதிருந்த நிலப்பிரபுத்துவ அமைப்பை மாற்றியமைக்கவிருந்த நேரத்தில், வட இந்தியாவில் உள்ள ஒரு ஜமீன் நகரத்தில் இந்த படத்தின் கதை நடப்பதாக அமைக்கப்பட்டிருந்தது.

தரன் (அதிதி) ஒரு பணக்காரப் சமீன்தாரின் (இக்பால்நாத் கவுல்) மகள். அவள் தன் தந்தை மற்றும் விதவை அத்தையுடன் (காந்தா வியாஸ்) தங்கள் மூதாதையரின் மாளிகையில் வசிக்கிறாள் (இது படத்தில் முழு உயர் வர்க்கத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது). புதிதாக உருவான தொழிலாளர் சங்கங்களின் ஆர்ப்பாட்டங்கள் இந்த நகரத்தில் நடக்கின்றன. அந்தப் போராட்டத்தை ஒரு இரயில்வே பொறியாளர் (அனில் பாண்ட்யா) முன்னெடுக்கிறார். அவர் தரனுடன் பேசாமலேயே அவர் மீது காதல் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. தரனின் அண்ணன் தன் தந்தையின் ஆதிக்கத்திலிருந்தும், தனது வர்க்கப் பெருமிதத்தைத் துறந்தும், அசாமில் இருக்கிறான். தரனை தன்னிடம் வந்துவிடுமாறு கடிதம் வழியாக அழைக்கிறான். திணறடிக்கும் ஆணாதிக்கக் குடும்பத்தில் சிக்கி, ஒரு உயர் வர்க்க மணமகனை திருமணம் செய்துகொள்ள அழுத்தம் கொடுக்கபட்டவளாய் தரன் இருக்கிறாள். அவள் தனது எதிர்காலத் திட்டங்களைப் பற்றி தனது தந்தையுடன் பேச முடிவு செய்கிறாள்.[1]

நடிகர்கள்

  • அதிதி
  • அனில் பாண்டியா
  • காந்த வியாஸ்
  • இக்பால்நாத் கவுல்

பாடல்கள்

  1. "ஆஜாரே நிண்டியா" - வாணி ஜெயராம்

மறு கண்டுபிடிப்பும், பாராட்டும்

1972 ஆம் ஆண்டில் மாயா தர்பன் வெளியீட்டுக்குப் பிறகு, விமர்சகரின் விருப்பமான சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விருதைப் வென்றது. ஆனால் விரைவில் மக்கள் இப்படத்தை மறந்துவிட்டனர்.[2]

ஷாஹானிக்கு அளித்த செவ்வியில், ரஃபிக் பக்தாதி மற்றும் ராஜீவ் ராவ் ஆகியோர் படம் வெளியான பிறகு அப்போது எதிர்கொண்ட எதிர்வினையைக் குறிப்பிடுகையில்: "வெளிநாடுகளில் நல்ல பாராட்டுக்களைப் பெற்ற போதிலும், மாயா தர்பன் (1972) இந்தியாவில் வரவேற்பைப் பெறவில்லை. விமர்சகர்கள் அதன் அதிகப்படியான சோர்வு தரும் வேகத்திற்காக அதை விமர்சித்தனர்."[3] 

இந்தப் படம் இந்தியாவின் சுயாதீன திரைப்பட ஆர்வலர்கள் மூலம் மீண்டும் தூசுதட்டி எடுக்கப்பட்டது. பின்னர் திரைப்பட ஆர்வலர்களிடையே இந்த படம் ஒரு மறுமலர்ச்சியையும் வரவேற்பையும் பெற்றது.[4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மாயா_தர்பன்&oldid=29556" இருந்து மீள்விக்கப்பட்டது