மாயாவி (எழுத்தாளர்)
மாயாவி என்ற புனைபெயரில் எழுதிய எஸ். கே. இராமன் தமிழ்ச் சிறுகதை, புதின ஆசிரியர் ஆவார். இந்திய அரசாங்கத்தின் செய்தி ஒலிபரப்புப் துறையின் பம்பாய் கிளையில் பதினைந்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
மாயாவி (எழுத்தாளர்)
இயற்பெயர்/ அறியும் பெயர் |
மாயாவி (எழுத்தாளர்) |
---|---|
பிறப்புபெயர் | எஸ். கே. இராமன் |
அறியப்படுவது | எழுத்தாளர் |
இளமையும் படைப்புகளும்
இவர் செங்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த சாம்பூர் வடகரை எனும் ஊரில் 1917 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஏறத்தாழ 150 சிறுகதைகளும் 9 நாவல்களும் எழுதியுள்ளார். இவரது முதல் சிறுகதை, ஜாதி வழக்கம் என்பது. இக்கதைப் பலராலும் பாராட்டப்பட்டது. சாமுண்டியின் சாபம் எனும் தலைப்பில் உள்ள சிறுகதைகள்,அன்பின் உருவம் எனும் தலைப்பில் உள்ள நாவல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
விருதுகள்
தமிழ்வளர்ச்சிக்கழக விருது (வாடாமலர்)
நூல்கள்
மாயாவி 150 சிறுகதைகளும் 9 நாவல்களும் எழுதியுள்ளார்
நாவல்
- கண்கள் உறங்காவோ
- கதி
- மக்கள் செல்வம்
- சலனம்
- ஒன்றே வாழ்வு
- வாடாமலர்
- மதுராந்தகியின் காதல்
சிறுகதை
- சாமுண்டியின் சாபம்
உசாத்துணை
- எழுத்தாளர் - மாயாவி | Tamilonline - Thendral Tamil Magazine
- ஏ. சி. செட்டியார் (தொகுப்பு) - "சிறுகதைக் களஞ்சியம்-தொகுதி1", சாகித்திய அக்காதமி - 2000
- முனைவர் தேவிரா - "தமிழ் இலக்கியத் தகவல் களஞ்சியம்", ஸ்ரீநந்தினி பதிப்பகம் - 2016
- Creativity.: Tribute to Writer S.K.Raman alias Mayavi 606.
- Tamil Historical Novel -Mayavi S.K Raman Novels-Madhuranthagiyin Kadhal மதுராந்தகியின் காதல் Part2-4
- யாருடைய சொத்து? | எழுத்தாளர் ஜெயமோகன்
- திருமதி பக்கங்கள்: கலைமகளும் சில நினைவலைகளும்
- மாயாவி சிறுகதை ’அஞ்சலி’ இணையம்